under review

முனீஸ்வரன் குமார்

From Tamil Wiki
முனீஸ்வரன் குமார்

முனீஸ்வரன் குமார் (1984) மலேசிய கல்வியாளர். தமிழ் பேராசிரியர் . மொழியியல் ஆய்வாளர். மலேசியாவில் சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரிந்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

முனீஸ்வரன் குமார் 1984-ம் ஆண்டில் கிள்ளான் நகரத்தில் பிறந்து, பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில் வளர்ந்தவர். தனது ஆரம்பக்கல்வியைச் சுங்கை சுமுன் வட்டாரத்திலுள்ள நீயூ கோகோனாட் தேசியவகைத் தமிழ்ப்பள்ளியில் முடித்த இவர், படிவம் 1 முதல் 6 வரையிலும் அதே வட்டாரத்திலுள்ள கீர் ஜோஹாரி தேசிய இடைநிலைப்பள்ளியில் படித்தார். அதனைத்தொடர்ந்து, மலாயா பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2008 வரையிலும் இளங்கலைப் பட்டப்படிப்பையும், 2008 முதல் 2011 வரையிலும் முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.2011 முதல் 2014 கோயம்பத்தூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

2011-ம் ஆண்டுத் தொடங்கி சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரிந்து வருகிறார்.

கல்விப்பணி

முனைவர் முனீஸ்வரன் 2016-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகத்தைத் தொடங்கினார் 2017-ம் ஆண்டில் சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்திலும், 2018-ம் ஆண்டில் தமிழகத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், 2019-ம் ஆண்டில் கோலாலம்பூரிலும் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகத்தின் ஏற்பாட்டில் பன்னாட்டு அளவிலான மூன்று மாநாடுகளை ஏற்று நடத்தினார். அம்மூன்று மாநாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் பத்து முதல் பதினைந்து நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய மாநாட்டில், இந்தியா முழுவதுமிருக்கும் பல மொழிகளிலிருந்தும் ஆய்வுக்கட்டுரைகள் கிடைக்கப்பட்டன. மாநாடுகளில் கிடைக்கப்பெற்ற ஆய்வுக்கட்டுரைகளைப் பிரசுரம் செய்வதற்கும் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகப் பதிப்பகம் உதவி வருகிறது. மேலும், ‘talias.org’ எனும் அகப்பக்கத்தின் வழியும் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் மாநாடுகளில் கிடைக்கப்பெற்ற ஆய்வுக்கட்டுரைகளை மின்னூல்களாகப் பதிவேற்றம் செய்துள்ளது.

இலக்கியப் பணி

தன்னுடைய 16-வது வயதில் பேராக் திருக்குறள் இயக்கம் நடத்திய சிறுகதைப் பயிலரங்கில் கலந்து தொடர்ந்து நடைபெற்ற சிறுகதை எழுதும் போட்டியில் பங்கு பெற்றார். அதில் பத்தாவது கதையாக வெற்றிபெற்ற அவரது சிறுகதை பின்னர் ‘வெள்ளிச் சிமிழ்கள்’ எனும் தொகுப்பாக வெளியீடு கண்டது. பள்ளி பருவத்திலே ஏறத்தாழ அவர் எழுதிய 12 சிறுகதைகள் தமிழ் நாளிதழ்களில் பிரசுரம் ஆகின. . மலாயா பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம், தமிழக இணையத்தளங்கள் முதலானோர் ஏற்று நடத்திய பல சிறுகதை மற்றும் கவிதை எழுதும் போட்டிகளில் அவர் கலந்து வெற்றியடைந்துள்ளார்.

அறுபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ள முனீஸ்வரன் குமாரின் தமிழீழம் 2030, சிவப்புப் புள்ளிகள், புதிய முடியும் இன்னொரு அடியும், அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும், கடவுள்களும் இவர்களும் ஆகிய பல சிறுகதைகள் பரிசுகள் பெற்ற சிறுகதைகள். , முனைவர் முனீஸ்வரன் எழுதிய கருப்பு எறும்புகள், அடிமைச் சங்கிலி, திமிரு பிடித்த மழை, மரங்கள் அங்கேயே இருக்கின்றன ஆகிய பல கவிதைகளும் பிரசுரம் ஆகியிருக்கின்றன. அல்லியின் திருமணம், சொத்து, காவ்யா ப்ரோஜெக்ட் ஆகிய நாடகங்கள் மின்னல் எப்.எம் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன

உசாத்துணை


✅Finalised Page