under review

முத்துராமலிங்க ஞானதேசிகர்

From Tamil Wiki

முத்துராமலிங்க ஞானதேசிகர் தமிழ்ப்புலவர். தமிழ் ஆன்மீகக் கீர்த்தனைகள் பாடியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

காரைக்குடி வணிகர் குலத்தில் மெய்யப்ப செட்டியாருக்கும், வள்ளியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். உகந்தலிங்க ஞானதேசிகரிடம் மெய்யறிவு பாடங்களைக் கற்றார். தன் பதிமூன்று வயதில் ஞான நூல்களைக் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

முத்துராமலிங்க ஞானதேசிகர் பிள்ளையார்பட்டியார் நகரத்தார் வேண்டுகோளுக்கிணங்க 'கற்பகப்பிள்ளையார் பாட்டு' பாடினார். 'பலபாடல் சுவாநுபலத் திருவாக்கு' நூலையும், பல பக்திப்பாடல்களையும் பாடினார்.

மறைவு

தன் இறுதி காலத்தில் கோவிலூர் மடத்தில் வேதாந்த நூல்களைப் போதித்து வந்தார். பங்குனி மாதம் எட்டாம் நாள் காலமானார்.

நூல் பட்டியல்

  • பலபாடல் சுவாநுபலத் திருவாக்கு
  • கற்பகப்பிள்ளையார் பாட்டு
புகழ் நூல்கள்
  • முத்துராமலிங்க செஞ்சறிவுறுத்தல்

உசாத்துணை


✅Finalised Page