under review

மாயா கோனே

From Tamil Wiki
MAJA

மாயா கோனே (Maja Koene) (மார்ச் 1945 - அக்டோபர் 15, 1999) சுவிஸ் நாட்டு புகைப்பட இதழாளர். சமூகப்பணியாளர். மதுரையில் சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம் நிறுவியவர்.

பிறப்பு, கல்வி

மாயா கோனே சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் மார்ச் 10, 1945-ல் பிறந்தார். புகைப்படக் கலைஞராக பயிற்சி எடுத்துக்கொண்டார். இளமையிலேயே மூன்றாமுலக நாடுகளில் தொடர்ச்சியாகப் பயணம் செய்தார்.

சமூகப்பணி

புகைப்பட இதழியலாளராக உலகப்பயணம் செய்த மாயா கோனே காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஏக்தா பரிஷத் அமைப்பின் நிறுவனரான பி.வி. ராஜகோபால் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட மாயா மதுரையில் 1994ல் சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம் (The Center for Experiencing Socio-Cultural Interaction - CESCI) என்னும் அமைப்பை தன் சொந்தச் செலவில் உருவாக்கினார்.

கே. ராதாகிருஷ்ண மேனன், டாக்டர் எஸ்.என். சுப்ப ராவ், திரு. வேணுகோபால், திரு. கே.எம். நடராஜன், டாக்டர் எஸ். ஜெயப்பிரகாசம் மற்றும் திரு. வி.சி. நடராஜன் உள்ளிட்ட பலர் இந்த தொலைநோக்குப் பணியில் அவருக்கு உதவினர்

மரணம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாயா கோனே அக்டோபர் 15,1999-ல் சூரிச்சில் மரணமடைந்தார்

நினைவு

மாயா கோனே நினைவாக அமைப்பால் மாயா கோனே நினைவு விருது சமூகப்பணியாளர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2026, 16:52:29 IST