under review

மாப்பாண முதலியார்

From Tamil Wiki

மாப்பாண முதலியார் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், நாடக ஆசிரியர். சோமகேசரி நாடகம், பரிமளகாச நாடகம் ஆகியவை முக்கியமான படைப்புகளாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாண தென்மராட்சியில் எழுதுமட்டுவாள் எனும் ஊரில் 19-ம் நூற்றாண்டில் மாப்பாண முதலியார் பிறந்தார். வைரவ சந்தான குரு மரபில் தோன்றினார். 'இருமரபுந்துய்ய குலசேகரப் புதுநல்ல மாப்பாண முதலியார்' என்பது சிறப்புப் பெயர். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். தென்மராட்சிப் பகுதிக்கு மணியக்காரராக சில காலம் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

மாப்பாண முதலியார் சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். சோமகேசரி நாடகம், பரிமளகாச நாடகம் ஆகிய நாடகங்களை எழுதினார். திருச்செந்தூர் புராண விரிவுரை எனும் நூலை எழுதினார்.

நூல்கள் பட்டியல்

  • குறவஞ்சி
  • ஆசெளச விதி
  • விரத நிச்சயம்
  • திருச்செந்தூர் புராண விரிவுரை
நாடகம்
  • சோமகேசரி நாடகம்
  • பரிமளகாச நாடகம்

உசாத்துணை


✅Finalised Page