மல்லிகை மகள்
From Tamil Wiki
- மல்லிகை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மல்லிகை (பெயர் பட்டியல்)

மல்லிகை மகள் (இதழ்) (2007) சென்னையிலிருந்து வெளிவரும் பெண்களுக்கான குடும்ப மாத இதழ். பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியது.
வெளியீடு
மல்லிகை மகள் இதழ் 2007 முதல் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்து வெளிவரும் பெண்கள் குடும்ப மாத இதழ். மா.கா. சிவஞானம் இதன் ஆசிரியர். பொறுப்பாசிரியர் பிரேமா நாராயணன், உதவி ஆசிரியர்கள் ஆ.பரஞ்ஜோதி, ஞானதேசிகன்.
உள்ளடக்கம்
மல்லிகை மகள் மகளிருக்கான செய்திகளைக் கொண்ட இதழாக வெளிவருகிறது. சமையல் குறிப்புகள், உணவு சார்ந்த கட்டுரைகள், ராசி பலன்கள், சினிமா, மருத்துவக்குறிப்புகள், புனைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 08:04:40 IST