மயிலை கார்த்திகேயன்
மயிலை கார்த்திகேயன் (Mylai M Karthikeyan) (பிறப்பு: ஜனவரி 3, 1998) நாதஸ்வர இசைக்கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
மயிலை கார்த்திகேயன் மயிலை மோகன்ராஜ், சாந்தி இணையருக்கு ஜனவரி 3, 1998-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் கண்ணன். மயிலாப்பூரிலுள்ள ஸ்ரீமதி மாலதி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார்.
அடையாறு சென்னை மியூசிக் அகாதமியில் மூன்று வருட பட்டயப்படிப்பு பயின்றார். 2015-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் நாதஸ்வர வாத்திய விசாரதா சான்றிதழ் தேர்வில் "முதல்வகுப்பு-தனிச் சிறப்பு" மாணவராக தேர்ச்சி பெற்றார். 2025-ம் ஆண்டு தமிழ் இசைக்கல்லூரியில் B.A வாய்ப்பாட்டுக்கான பட்டயம் பெற்றார்.
கலை வாழ்க்கை
மயிலை கார்த்திகேயன் தன் எட்டாவது வயது முதல் தந்தை மயிலை மோகன்ராஜிடமிருந்து நாதஸ்வரம் கற்றார். வியாசர்பாடி கோதண்டராமனிடம் தனிப்பட்ட முறையில் நாதஸ்வரம் கற்றார். பத்து வயது முதல் இசைக்கச்சேரிகளில் பங்கேற்று வருகிறார். சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களில் நிகழும் பல்வேறு இசைக்கச்சேரிகளில் நாதஸ்வரம் வாசித்து வருகிறார். மிருதங்க வித்வான் காரைக்குடி மணி அவர்களோடு இணைந்து 2020 மார்கழி உத்சவம் நிகழ்வில் வாசித்துள்ளார்.
இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களின் ஒருங்கிணைப்பில் பீத்தோவனின் இசைத் கோர்வை ஒன்றினை மையமாக வைத்து உருவாக்கிய இசை வடிவநிகழ்வில் கீர்த்தனை, ராகம், ஸ்வரம், குறைப்பு, முத்தாய்ப்பு என்ற அமைப்பில் "பீத்தோவனப்பிரியா" என்று பெயரிடப்பட்டு 2020 ஆண்டு சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்வில் பங்குபெற்றுள்ளார். பிரெஞ்ச் இசைக்கலைஞர்களுடன் இணைந்து சென்னை மியூசிக் அகாடெமியில் 2022-ல் பியூசன் மியூசிக் நிகழ்வு செய்துள்ளார்.
விருதுகள்
- கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது (2020)
- சண்முக சங்கீத சிரோன்மணி (2021)
- தமிழ்நாடு அரசின் கலைவளர்மணி (2021-22)
இணைப்புகள்
- மயிலை கார்த்திகேயன் - யூடியூப் தளம்
- Ragam: Behag - Nagaswaram Mylai M. Karthikeyan
- Ragam: Bageshri - Nagaswaram Mylai M. Karthikeyan
- Ragam: Sindhubhairavi - Nagaswaram Mylai Karthikeyan
- A chip off the old block - Mylai Karthikeyan is happy to continue the nagaswaram legacy of his father - TheHindu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jul-2025, 21:21:51 IST