under review

ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன

From Tamil Wiki
ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன

ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன (1982 ) வாசந்தி எழுதிய நாவல். தமிழில் பொதுவாசிப்புக்குரிய தளத்தில் எழுதப்பட்ட வயதடைவு நாவல்களில் ஒன்று. வடகிழக்கு மாவட்ட நிலப்பரப்பில் நிகழும் கதை.

எழுத்து,வெளியீடு

வாஸந்தி எழுதிய ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன ஒரு வயதடைவு நாவல். மேகாலய மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கைப் பின்னணியாகக் கொண்டது. "ஷில்லாங் வெகு அழகான மலைவாசஸ்தலம். நான் அதன் இயற்கை அழகை என்னை மறந்து ரசித்து அமர்ந்த நாட்கள் அநேகம். அங்கு ப்ளம் மரங்கள் பூக்கும்போது பார்க்கக் கிடைக்கும் காட்சி தெய்வ தரிசனம் போன்றது. அங்கு எங்களுக்குப் பரிச்சயமான ஒரு அஸ்ஸாமிய குடும்பத்தில் நான் மனோவியல் ரீதியாக அவர்களது பிரச்சினையை அணுக முயன்றதன் வெளிப்பாடே இந்த நெடுங்கதை. இது எங்கு வேண்டுமானாலும் நிகழக்கூடிய கதைதான். ஆனால் நான் ஷில்லாங்கில் இருந்தபோது சந்தித்த கதாபாத்திரங்கள் என்பதால் அதன் இயற்கைப் பின்னணியில் எழுதினேன்" என்று வாசந்தி குறிப்பிடுகிறார்.

கதைச்சுருக்கம்

மேகாலயாவின் ஷில்லாங் நகரில் ஒரு சிறு குடும்பத்தில் தாய் தந்தை மகன் மூவருக்குள் நிகழும் கதை. மேல்தட்டு குடும்பத்து பையன் ஒருவன் படிப்பு வராமல் தோட்டத்திலேயே ஈடுபட்டிருக்கிறான். தன்னைப்பற்றி மற்றவர்கள் கொண்டிருக்கும் சித்திரம் அவனுக்கு தெரியவருகிறது. அவன் ஊரைவிட்டு ஓட முயல்கிறான். பெற்றோர் அவனை தடுத்து அவனை புரிந்துகொள்கிறார்கள்.

உசாத்துணை


✅Finalised Page