under review

பௌஸியா அலியார்

From Tamil Wiki

பௌஸியா அலியார் (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர். சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பாடசாலைக் கீதம் பௌசியாவினால் இயற்றப்பட்டது. கவிதைகள், சிறுவர் பாடல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பௌஸியா அலியார் இலங்கை நாட்டின் அம்பாறை சம்மாந்துறையில் பிறந்தார். தந்தை நாவலர் ஈழமேகம் பக்கீர்த்தம்பி என்ற அடைமொழியில் அறியப்பட்ட எழுத்தாளர்.

பௌஸியா அலியார் ஆசிரியராகப் பணியாற்றினார். சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பாடசாலைக் கீதம் பௌசியாவினால் இயற்றப்பட்டது.

தனிவாழ்க்கை

பௌஸியா அலியாரை மணந்தார். கணவர் ஆலியாரும் எழுத்தாளர். இரண்டு மகன்கள். ஒரு மகள். மகள் ஷெரீன் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியுள்ளார். பௌஸியா அலியார் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

பௌஸியா அலியார் கவிதைகள் எழுதினார். பௌஸியா பக்கீர்தம்பி என்ற பெயரில் ஆரம்பத்தில் எழுதி வந்தாலும் திருமணத்திற்கு பின்னர் பௌஸியா அலியார் என்ற பெயரிலேயே எழுதி வருகிறார். 2012-ம் ஆண்டு மணி 'ஆரம்' என்ற பெயரில் சிறுவர் பாடல் தொகுதிகளை வெளியிட்டார். 2016-ல் கணவருடன் இணைந்து 'இளசுகளின் உலகம்' என்ற பெயரில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இவரின் கவிதைகள், கட்டுரைகள் இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்தன.

விருது

  • அரச இலக்கிய விழாவில் கலாபூஷணம் விருது - 2013

நூல் பட்டியல்

  • இளசுகளின் உலகம் (கவிதைத்தொகுப்பு)
  • மணி ஆரம் (சிறுவர் பாடல் தொகுதி)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jan-2026, 03:47:13 IST