under review

பொருண்மொழிக்காஞ்சி

From Tamil Wiki

பொருண்மொழிக்காஞ்சி நுண்பொருளை அகத்தே கொண்ட சான்றோர் ஆராய்ந்து கூறிய நன்மொழி. 'பொருளுரை’ என்றும், ’பொருண்மொழிக்காஞ்சி’ என்றும் வழங்கப்படுகின்றது. புறத்துறையைச் சார்ந்தது.

இலக்கணம்

எரிந்திலங்கு சடைமுடிமுனிவர் புரிந்து கண்ட
பொருண் மொழிந்தன்று.

விளக்கம்

நெருப்பு போன்று சிவந்து விளங்கும் சடாமுடியை உடைய முனிவர்கள் ஆராய்ந்து கண்ட உண்மைப் பொருளைக் கூறுவது பொருண்மொழிக்காஞ்சித் துறை. பொருண்மொழிக்காஞ்சித் துறையின் பாடல்களாக புறநானூற்றில் பதினேழு பாடல்கள் (5, 24, 75, 121, 182, 183, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 195, 214) உள்ளன. தொல்காப்பியம் இதனை வாகைத்திணையின் துறையாகவும், புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பொதுவியல் படலத்தின் கூறாக வரும் காஞ்சித்திணைப் பகுதியில் ஒன்றாகவும் காட்டுகின்றன. மக்களுக்கும், மன்னனுக்கும் கூறப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page