under review

பூலோக ரகசியம் எனும் மதிமோசக் களஞ்சியம்

From Tamil Wiki
பூலோக ரகசியம் எனும் மதிமோசக் களஞ்சியம்

‘பூலோக ரகசியம் எனும் மதிமோசக் களஞ்சியம்’ - நூல், எம்.என்.எம். பாவலர் என அழைக்கப்படும் எம்.என். முத்துக்குமாரஸ்வாமி பாவலரால் (முத்துக்குமாரசாமிப் பாவலர்) எழுதப்பட்டது. மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள், அவர்களை தந்திரம் உள்ளவர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை விளக்கி மிக விரிவாக எழுதப்பட்டுள்ள நூல் இது.

மதிமோசக் களஞ்சியம் நூல் விளம்பரம்

பதிப்பு, வெளியீடு

‘பூலோக ரகசியம் எனும் மதிமோசக் களஞ்சியம்' நூல் 1925-ல் வெளியானது. இது இரண்டு பாகங்கள் கொண்டது. மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக எம்.என்.எம். பாவலர் என அழைக்கப்படும் எம்.என். முத்துக்குமார ஸ்வாமிப் பாவலரால் இந்நூல் எழுதப்பட்டது. பாலகவி பெ.சூ. ராஜன் என்னும் பெ. சூ. பாலராஜ பாஸ்கரர், இந்த நூலைச் செப்பம் செய்து பாடல்கள் இயற்றி வெளியிட்டுள்ளார். இதன் விலை ஒரு ரூபாய். இரண்டு பாகங்களும் சேர்த்து இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூன்றாவது பதிப்பு 1928-ல் வெளிவந்தது. தொடர்ந்து பல பதிப்புகள் கண்டது.

பூலோக ரகசியம் எனும் மதிமோசக் களஞ்சியம் - அல்லயன்ஸ் பதிப்பகத்தின் புதிய பதிப்பு
புதிய பதிப்பு

இந்நூலை அல்லயன்ஸ் பதிப்பகம் மறு பதிப்புச் செய்துள்ளது.

உள்ளடக்கம்

மக்களை, தந்திரம் உள்ளவர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை மிக விரிவாக இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளார் எம்.என்.எம். பாவலர். முதல் பாகத்தில் 141 ஏமாற்று மோசடிகள் பற்றிய செய்திகளும், இரண்டாம் பாகத்தில் 107 ஏமாற்று மோசடிகள் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இரண்டு பாகங்களும் சேர்த்து இந்நூலில் 248 ஏமாற்றுத் தந்திரங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

குலுக்குச் சீட்டு மோசம்

ஏமாற்றுத் தந்திரங்கள் - 141 (முதல் பாகம்)

எண் ஏமாற்று மோசங்கள்
1 தெய்வப் பிராத்தனை மோசம்
2 ஜவுளிக்கடை வியாபார மோசம்
3 அரிசி வியாபார மோசம்
4 மூர்மார்க்கட் விபரீத மோசம்
5 கடிகார மோசம்
6 மூக்குக்கண்ணாடி மோசம்
7 கிலிட்டு மோதிர மோசம்
8 பவுண்டன் பென் மோசம்
9 கத்தரிக்கோல் மாஸ்டர் மோசம்
10 மணிலாக்கொட்டை வியாபார மோசம்
11 மணிலாக்கொட்டை கொண்டு வந்திருப்பதான மோசம்
12 காசிக்கடைக்காரர் மோசம்
13 தட்டார ஜித்தின் மோசம்
14 வட்டிக்குப் பணம்விட்டோர் போகும் மோசம்
15 சைனாக்காரர்கள் கண்களிலும் வாயிலும் பூச்செடுப்பதான மோசம்
16 அண்டாச்சீட்டென்னும் குலுக்குச்சீட்டு மோசம்
17 ரஸ்தாவில் பொன்துணுக்கு அகப்படும் மோசம்
18 தையற்காரரின் மோசம்
19 சக்கிலிகள் மோசம்
20 தட்டுவாணி சிறுக்கிகள் மோசம்
21 விலைமாதர்களின் பிழைப்பின் மோசம்
22 பிச்சைக்காரர்களின் மோசம்
23 மார்வாடிகளின் மோசம்
24 பத்திரிகை காட்லாக் மூல்யமாய்ச் செய்யும் மோசம்
25 காய்கறிகடைகளின் மோசம்
26 கசாப்புக்கடைக்காரர்களின் மோசம்
27 சாராயக்கடை மோசம்
28 பெட்டிச்சாவி போடுகிறவர்களின் மோசம்
29 சுண்ணாம்பு விற்பவர்களின் மோசம்
30 ஈட்டிக்காரர்களின் மோசம்
31 வண்ணாரஜித்தின் வழிமோசம்
32 வீடு குடிக்கூலிக்கு வருகிறதாய் மோசம்
33 கெடியார ரிப்பேர் செய்கிறவர்கள் மோசம்
34 வழியில் போகிறவர்களிடமிருந்து திருடும் மோசம்
35 வழிப்போக்கரை இடித்துப் பிடுங்கும் மோசம்
36 ஏலம் போடுகிறவர்களின் மோசம்
37 பள்ளிக்குப் பிள்ளையென்பவர்கள் மோசம்
38 ஜட்காவண்டிக்காரர்களின் மோசம்
39 திருப்பதிக்குப் போவதாக வீதியில் புரளும் மோசம்
40 பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் மோசம்
41 கொல்லத்துக்காரர்கள் சூதான மோசம்
42 உத்தியோகஸ்தர் லீவு வேண்டியதற்குச் செய்யும் மோசம்
43 உத்தியோக மிழந்ததாய்ச் சொல்லும் மோசம்
44 தண்ணீர்க் குழாயருகில் செய்யும் மோசம்
45 நாடகக்காரர்களின் படாடோப விளம்பரத்தின் மோசம்
46 நாடக ஷோக்பிடித்தோர் போகும் மோசம்
47 ஜாலம் செய்வதாக மோசம்
48 குடுகுடுப்பைக்காரர்களின் மோசம்
49 சிலம்பவித்தைக்காரர் படாடோப மோசம்
50 கிராமத்து நாட்டாண்மைக்காரர்கள் மோசம்
51 டான்சு ஆடுவதாக மோசம்
52 தெருக்கூத்தாடிகளின் வேடிக்கை மோசம்
53 காசிக்கயிறு விற்பவர்கள் மோசம்
54 காவடி ஆடுபவர் மோசம்
55 ஷோக் பிள்ளைகள் செய்யும் மோசம்
56 வெகு வேலைக்காரப்பிள்ளைகளின் மோசம்
57 புடவை, துணி முதலிய திருடும் மோசம்
58 பெருமாள் மாட்டுக்காரன் பிழைப்பின் மோசம்
59 பையாஸ்கோப்பால் விளையும் மோசம்
60 சன்னியாசியின் மோசம்
61 யோக சன்னியாசிகள் மோசம்
62 போலிப் பண்டாரங்கள் மோசம்
63 பகல் கூத்தாடிகளின் மோசம்
64 செப்படி வித்தைக்காரர் குட்டிச்சாத்தான் ஜால மோசம்
65 கலியாண யாசக மோசம்
66 டாம்பீகமான கலியாண யாசகர் மோசம்
67 கொடும்பாவி இழுப்பவர்கள் மோசம்
68 மை போட்டு திருட்டுக் கண்டுபிடிப்பதாய் மோசம்
69 செம்பு வைத்துக் கட்டுப்பிடிக்கிறவர் மோசம்
70 குழந்தைக்கு தோஷம் நிவர்த்திச் செய்வதான மோசம்
71 சாமி ஆடுபவர் மோசம்
72 காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கைங்கரிய மோசம்
73 திருவள்ளூர் தண்ணீர்ப்பந்தல் தரும மோசம்
74 மைலம் சுப்பிரமணியக்கடவுள் தர்மவுண்டி மோசம்
75 திருப்பதிக்குப் போகிறதாக மோசம்
76 திருத்தணிகை தரும மோசம்
77 திருப்பதி வெங்கலப்படி தரும மோசம்
78 வடதேசத்து வாயில்லா பிராமணர்கள் மோசம்
79 போலிப்பிராமணர்கள் பிழைப்பின் மோசம்
80 ஓட்டுகேட்பவர்களது ஒய்யார மோசம்
81 முதல்தர காபி ஓட்டல் மோசம்
82 கங்காசலக்காவடி மோசம்
83 இரண்டாந்தர காபி ஓட்டல் மோசம்
84 காபி ஓட்டல் ஷோக்காளிகள் செய்யும் மோசம்
85 சாப்பாடு ஓட்டல்கள் மோசம்
86 சோறு விற்கும் கடைகள் மோசம்
87 கள்ளுக்கடைகள் ஆபாச மோசம்
88 நல்லதங்காள் கதை பாடுபவர் மோசம்
89 ஆஞ்சநேய ஆவேசக்காரர் மோசம்
90 சிலோன், கண்டி பிரதேசங்களுக்கு ஆளேற்றும் மோசம்
91 போலிப்பாகவதர் மோசம்
92 கூத்தாண்டவர் வேஷமும் கங்கையம்மன் வேஷமும் தரிப்பவர்களது மோசம்
93 அல்லாசாமி பண்டிகை மோசம்
94 காமன்பண்டிகை மோசம்
95 கலியாணம் முடிக்கும் தரகர்கள் மோசம்
96 உத்தியோகஸ்தர்கள் செய்யும் திவசத்தின் மோசம்
97 குறிசொல்லுவோர் மோசம்
98 இறந்த பிணத்தின் யாசக மோசம்
99 ஆபரணம் அடகு வைக்கும் தரகுப் பெண்கள் மோசம்
100 பிச்சைக்காரர்களின் தந்திரமோசம்
101 பித்தளைப் பொத்தான் மோசம்
102 மூக்குக்கண்ணாடிக் கடைக்காரர்கள் மோசம்
103 நாட்டு வண்டிக்காரர்களை ஏமாற்றும் மோசம்
104 வெளியூராரின் மோசம்
105 புளி விற்கிறவர்களின் மோசம்
106 அங்காளம்மன் யாசக மோசம்
107 சிங்கப்பூரிலிருந்து வந்தவன் செய்யும் மோசம்
108 சுப, அசுப காலங்களில் நடக்கும் மோசம்
109 குறிமேடை மோசம்
110 விளக்குவைத்துப் பார்க்கும் மோசம்
111 பழம் வைத்துக் குறிகேட்கும் மோசம்
112 சோதிடர்கள் மோசம்
113 ஸ்ரீராமசக்கரம் போடுவோர் மோசம்
114 பால்விற்பதில் மோசம்
115 மிஷனரிகள் அல்லது கிறிஸ்துமத உபதேசிகள் மோசம்
116 ஓலைச்சுவடி ஆரூடம் சொல்பவர் மோசம்
117 வடதேசத் துறவிகள் மோசம்
118 கைரேகை சாஸ்திரம் பார்ப்பவர்கள் மோசம்
119 ரிக்ஷா வண்டிக்காரர் அநியாய மோசம்
120 கோழி திருடும் குறவர்கள் மோசம்
121 சாப்பாட்டு சாமான்களைத் திருடுவோர் மோசம்
122 பொய்சாட்சி சொல்லுவோர் மோசம்
123 போலிப் பெரிய மனிதர்களின் செயற்கை மோசம்
124 குறத்திகளின் கேப்மாறித்தன மோசம்
125 பிசாசு ஓட்டுகிறவர்கள் மோசம்
126 புதையல் எடுக்கிறதாகச் செய்யும் மோசம்
127 இரசவாதம் அல்லது பொன் செய்யும் மோசம்
128 எடை குறையும் சவரன்கள் மோசம்
129 இரயில்வே ஸ்டேஷனில் மோசம்
130 ஸ்டேஷனில் அடாவடித்தன மோசம்
131 போர்ட்டர்கள் திருட்டு மோசம்
132 பிரயாணிகள் போகும் மோசம்
133 செங்கல் வண்டிக்காரர் மோசம்
134 போலி வைத்தியர்கள் மோசம்
135 இரசமணி மோதிரங்கள் மோசம்
136 காந்தி மகான் பெயரால் மோசம்
137 நோட்டீஸ் மூலமாய்த் தெரிவிக்கும் வைத்திய விளம்பர மோசம்
138 பல்பொடி மோசம்
139 இந்துஸ்தான் வைத்தியர்கள் மோசம்
140 விஷக்கடி மருந்து மோசம்
141 ஸ்ரீமந் நாராயணன் பூலோகத்தில் பிறந்திருப்பதான புரளி மோசம்

ஏமாற்றுத் தந்திரங்கள் - 107 (இரண்டாம் பாகம்)

1 ஜோஸியர் மோசம்
2 கட்டுப்பிடித்துப் பார்த்தல் மோசம்
3 தென்னாட்டார் குறி சொல்லுதல் மோசம்
4 சந்நியாசிகள் மோசம்
5 நாட்டக்கார்
6 பொன் துண்டு மோசம்
7 அங்காளம்மன் பிச்சை
8 பலவகைப் பிச்சைக்காரர்கள் மோசம்
9 கோயில்குளம் கைங்கரிய யாசகம்
10 பிராமணர்கள் யாசகம்
11 அர்ச்சனைத் திருவிளக்குத் தர்மம்
12 உத்தியோக மிழந்ததாய் யாசகம்
13 பொங்கல் பிச்சை
14 திருவள்ளூர் முதலிய தவலை உண்டி தர்மம்
15 திருப்போரூர் தர்மம்
16 திருப்போரூர் தண்ணீர்ப்பந்தல் தர்மம்
17 திருப்பதிக்குப் போகிற பாவனையாக யாசகம்
18 நடுத்தெருவில் புரளும் யாசகம்
19 திருப்பதிக் குடை
20 காசிப் பிராமணர்கள் காவடி மோசம்
21 மூலவியாதி சிகிச்சை மோசம்
22 பௌத்திர சிகிச்சை மோசம்
23 பல் வைத்திய சிகிச்சை மோசம்
24 மராட்டிய வைத்தியர்
25 பஞ்சாப் வைத்தியர் மோசம்
26 காரோசனை மோசம்
27 மஸ்தூரி மோசம்
28 சாலாமிசிரி மோசம்
29 சிலாசத்து மோசம்
30 நரிக்கொம்பும் நரிநகமும்
31 வாதப் பித்தானிக்கு மருந்து
32 மூக்குக்கண்ணாடி விற்றல்
33 பித்தளைக் கடுக்கண் ஏலம்
34 குடிக்கூலிக்கு வருவதாய் மோசம்
35 அரிசி மண்டித் தரகரின் மோசம்
36 அரிசி மண்டிக் கூலிக்காரர் மோசம்
37 அரிசி மண்டி அளவுக்காரர் மோசம்
38 அரிசி மண்டிக்காரர் மோசம்
39 அரிசி வாங்கிக் கொடுப்பதாய் மோசம்
40 அரிசி வந்திருப்பதாக மோசம்
41 அரிசி கொண்டு வந்திருப்பதாக மோசம்
42 வண்டி மேட்டில் மோசம்
43 சுண்ணாம்புக் காளவாய் மோசம்
44 செங்கற் சூளை வண்டிக்காரர் முதலியோர் மோசம்
45 கொத்தவால் சாவடி மோசம்
46 ஜவுளிக்கடை வியாபார மோசம்
47 பசு மாடு வியாபார மோசம்
48 பாளையத்தரிசி மோசம்
49 திருநெல்வேலி செட்டில்மெண்ட்
50 ஜோகிகள் கலியாண யாசகம்
51 குறப்பெண்களும் சிறுபிள்ளைகளும்
52 குறப்பெண்கள் யாசகம்
53 வம்புச் சிறுக்கிகள் மோசம்
54 நெட்டாலிலிருந்து வந்ததாக ஏமாற்றல்
55 பகல் கூத்தாடிகள் வேட்டை
56 கொள்ளைப் பொருளைக் குறைந்த விலைக்கு விற்பதாய் மோசம்
57 டாபர்கள் மோசம்
58 தவசுப் பிள்ளைகள்
59 காபி ஓட்டல்கள்
60 அன்னச் சத்திரம் சோற்றுக்கடை
61 புரோகிதர் பிழைப்பும் எளியவர் வீட்டுத் திதியும்
62 உத்தியோகஸ்தர் திதி
63 ஷோக் பிள்ளைகள்
64 பள்ளிப் பிள்ளைகள்
65 வால்யு பேயபில் மோசம்
66 கள்ளுக் கடை ஏற்பாடு
67 கள்ளுக் கடை குமாஸ்தாக்கள் திறமை
68 குருவிக்காரர்
69 மயிலெண்ணெய் மோசம்
70 லீவு வேண்டியதற்கு மோசம்
71 சிறுத் தொண்டன் படம்
72 பொய்சாட்சி உத்தியோகம்
73 குடியைக் கெடுக்கும் குண்டுணிகள்
74 பெண் சேசும் தரிகரிகள்
75 எமிக்கிரண்ட் டிபோ
76 காமன் பண்டிகை
77 அல்லாசாமிப் பண்டிகை
78 சங்கராந்திப் பண்டிகை
79 போலிப் பிராமணர்
80 போலி வைஷ்ணவர்
81 தெய்வ ஆவேசம்
82 லாடக் குறி
83 குறவர் குறி
84 குறி மேடை
85 மாவுப் பூசாரிகள்
86 விளக்கு வைத்துக் கேட்டல்
87 பழம் வைத்துக் கேட்டல்
88 பூ வைத்துக் கேட்டல்
89 பேயோட்டல்
90 அசுப காலத் திருட்டு
91 சுப காலத் திருட்டு
92 அரிசித் திருட்டு
93 புடவைத் திருட்டு
94 ரெயில்வே டிக்கட் மோசம்
95 ரெயில்வே திருட்டு
96 கோழித் திருட்டு
97 தண்ணீர்க் குழாயண்டை தவலை செம்புத் திருட்டு
98 சாப்பாட்டுச் சாமான்கள் திருட்டு
99 நடுத்தெருக் கொள்ளை
100 பொன் செய்கிறதாய் மோசம்
101 புதையல் எடுத்தல்
102 மோடி எடுக்கிற மோசம்
103 ஓட்டர் மோசம்
104 பால்காரர் மோசம்
105 கழிப்பெடுத்தல்
106 தேக்குமரத் தொட்டிக்காரர் மோசம்
107 வக்கீல்கள் சாமர்த்தியம்

இந்த ஏமாற்று மோச வேலைத் தந்திரங்களில் பல இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளன.

உசாத்துணை


✅Finalised Page