under review

புவி காலக்கோடு

From Tamil Wiki
புவி பிறப்பு, தோற்றம் காலக்கோடு (நன்றி: NCERT)

புவி காலக்கோடு என்பது காலவரிசைப்படி புவியின் பிறப்பு, உருவாக்கத்தை குறுக்குவெட்டாக அடுக்குகிறது.

தோற்றம்

  • 13,700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பு (Big Bang)நிகழ்ந்தது
  • 5000-13,700 மில்லியன் ஆண்டுகளில் பெருவெடிப்பிற்குப் பின்னான சூப்பர்நோவா மற்றும் நட்சத்திரங்களின் உருவாக்கம் நடைபெற்றது.

காலம்

  • ஈயான்(Eons)> ஈரா(Era)> கால வட்டம்(Period)> ஈபோ(Epoh)> வயது/ஆண்டுகள் என கால அலகுகள் பெரியது முதல் சிறியது வரை வகைப்படுத்தப்பட்டன.
  • புவி காலக்கோட்டைப் பொறுத்து ஈயான்கள் பெரிய அளவிலான காலகட்டத்தைக் குறிக்கிறது.
ஈயான்(Eons)
  • ஃபெனரோஜோயிக் (Phanerozoic) (தற்போது வரை - 570)
  • ப்ரோடிரோஜோயிக் (Proterozoic) (570-2500 மில்லியன்)
  • ஆர்கியன் (Achean) (2500-3800 மில்லியன்)
  • ஹேடன் (Hadean) (3800-4800 மில்லியன்)
ஈரா(Era)
  • கெய்னோஜோயிக் (Cainozoic) (65 மில்லியன் முதல் தற்போதுவரை)
  • மீசோஜோயிக் (Mesozoic) (65-245 மில்லியன்) - பாலூட்டிகள்
  • பேலியோஜோயிக் (Paleozoic) (245-570 மில்லியன்)
  • கேம்பிரியனுக்கு முன் (Pre-Cambrian) (570-4800 மில்லியன்)
கால வட்டம்(Period)
  • க்வர்டர்னெரி (Quaternary) - 0-2மில்லியன்
  • டெர்ஷியரி (Tertiary) - 2-65 மில்லியன்
  • க்ரிடேஷியஸ் (Cretaceous) - 65-144 மில்லியன்
  • ஜுராஸிக் (Jurassic) - 144-208 மில்லியன்
  • ட்ரையாஸிக் (Triassic) - 208-245 மில்லியன்
  • பெர்மியன் (Permian) - 245-286 மில்லியன்
  • கார்போனிஃபெரஸ் (Carboneferous) - 286-360 மில்லியன்
  • டிவோனியன் (Devonian) - 360-408 மில்லியன்
  • ஸிலுரியன் (Silurian) - 408-438 மில்லியன்
  • ஓர்டோவிஸியன் (Ordovician) - 438-505 மில்லியன்
  • கேம்பிரியன் (Cambrian) - 505-570 மில்லியன்
ஈபோ(Epoh)
ஈபோ ஆண்டுகள் நிகழ்வுகள்
ஹோலோஸீன் (Holocene) 0-10000 நவீன மனிதன்
ப்ளீஸ்டோஸீன் (Pliestocene) 10000-2 மில்லியன் ஹோமோ சேபியன்ஸ்
ப்ளியோஸீன் (Pliocene) 2-5 மில்லியன் மனித முன்னோர்கள்
மையோஸீன் (Miocne) 5-24 மில்லியன் குரங்கு, பூக்கும் தாவரங்கள், மரங்கள்
ஒலிகோஸீன் (Oligocene) 24-37 மில்லியன் மனிதக் குரங்கு
இயோஸீன் (Eocene) 37-58 மில்லியன் முயல், குழி முயல்கள்
பேலியோஸீன் (Palaeocene) 57-65 மில்லியன் சிறிய பாலூட்டிகள்: எலி, சுண்டெலி

புவி காலக்கோடு

ஆண்டுகள் நிகழ்வுகள்
0-10000 நவீன மனிதன்
10000-2மில்லியன் ஹோமோ சேபியன்ஸ்
2-5மில்லியன் மனித முன்னோர்கள்
5-24மில்லியன் குரங்கு, பூக்கும் தாவரங்கள், மரங்கள்
24-37மில்லியன் மனித குரங்கு
37-58மில்லியன் முயல், குழி முயல்கள்
57-65மில்லியன் சிறிய பாலூட்டிகள்: எலி, சுண்டெலி
65-144மில்லியன் டைனோசர்களின் முற்றழிவு
144-208மில்லியன் டைனோசர்களின் காலம்
208-245மில்லியன் தவளைகள், ஆமைகள்
245-286மில்லியன் ஈரூடக வாழிகளை பதிலீடு செய்து ஊர்வன ஆதிக்கம்
286-360மில்லியன் முதல் ஊர்வன: முதுகெலும்பிகள்: நிலக்கரி படுகை
360-408மில்லியன் ஈரூடக வாழிகள்
408-438மில்லியன் நிலத்தில் முதல் உயிருக்கான சுவடு: தாவரம்
438-505மில்லியன் முதல் மீன்
505-570மில்லியன் நிலப்பரப்பில் உயிரற்றிருத்தல், கடல்வாழ் முதுகெலும்பற்ற உயிரி
570-2500மில்லியன் மெல்லுடல் கொண்ட ஆர்த்தரோபோட்கள்
2500-3800மில்லியன் நீலப்பச்சை ஆல்காக்கள்: ஒற்றைசெல் பாக்டீரியா
3800-4800மில்லியன் பெருங்கடல்கள், கண்டங்கள் உருவாதல் - கார்பன் டை ஆக்ஸைடு நிரம்பியிருத்தல்
5000மில்லியன் சூரியனின் தோற்றம்
12000மில்லியன் பிரபஞ்சத்தின் தோற்றம்
13700மில்லியன் தொடக்கம்

ஆன்த்ரோபோஸீன் (Anthropocene)

ஆந்த்ரோபோசீன் என்பது புவி காலக்கோடு சார்ந்து அதிகாரப்பூர்வமற்ற, அறிஞர்களால் முன்மொழியப்பட்ட அலகு. புவியின் வரலாற்றில் மனித வரவுக்குப்பின் கட்டற்ற செயல்பாடுகளால் மிகக் குறுகிய காலத்தில் புவியியல், காலநிலை, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றவியலா தன்மையை அடையாளப்படுத்த அறிஞர்களால் முன்மொழியப்பட்டது. சில அறிஞர்கள் தொழில்புரட்சி ஆரம்பித்த 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இக்காலகட்டத்தின் தொடக்கத்தை ஊகிக்கின்றனர். சிலர் 1945-ல் ஹிரோஷிமா, நாகசாகியில் இரண்டாம் உலகப்போரின் போது போடப்பட்ட அணுகுண்டுக்குப் பின்னான காலகட்டத்தை ஆன்த்ரோபோஸீன் காலகட்டமாக ஊகிக்கின்றனர். International Union of Geological Sciences-ன் ஒரு பகுதியான The International Stratigraphic Commission புவியியல் காலக்கோடு சார்ந்து பெயர்களைத் தீர்மானிக்கிறது.

உசாத்துணை


✅Finalised Page