under review

புதிய ஏற்பாடு

From Tamil Wiki

ஏற்பாடு என்னும் சொல்லுக்கு உடன்படிக்கை, ஒப்பந்தம் என்பது பொருள், இறைவன், பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்களின் தொகுப்பு, பழைய உடன்படிக்கை (பழைய ஏற்பாடு) என்றும், கிறிஸ்துவின் காலத்திலும் அவர் மறைந்த சில காலத்திற்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு என்றும் அழைக்கப்படுகின்றன.

புதிய ஏற்பாடு

விவிலியத்தின் இரண்டாவது பகுதி புதிய ஏற்பாடு. இறைவனின் மகன், இயேசு என்னும் மனிதராகப் பிறந்து, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு மாண்டார் என்பதும், மரணத்தை வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. ‘புதிய ஏற்பாடு’ இயேசுவின் பிறப்பு முதல் அவர் சிலுவையில் மாண்டது, மீண்டது மற்றும் அவருடைய சீடர்களின் மறை பரப்புதல் பணி வரை அனைத்தையும் விரிவாக விளக்குகிறது

புதிய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள்

பிரிவுகள்

புதிய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள் கீழ்காணும் 9 பிரிவுகளில் அமைந்துள்ளன.

நூல்கள் எண்ணிக்கை
நற்செய்தி நூல்கள் 4
வரலாற்று நூல் 1
பவுல் திருமுகங்கள் 13
யாக்கோபு திருமுகம் 1
பேதுரு திருமுகங்கள் 2
யோவான் திருமுகங்கள் 3
யூதா திருமுகம் 1
ஆசிரியர் பெயர் அறிய இயலாத திருமுகம் 1
காட்சி நூல் 1
மொத்த நூல்கள் 27
நூல்கள்

புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 நூல்கள் இடம் பெற்றுள்ளன. அவை,

எண் நூல்கள்
1 மத்தேயு நற்செய்தி
2 மாற்கு நற்செய்தி
3 லூக்கா நற்செய்தி
4 யோவான் நற்செய்தி (அருளப்பர் நற்செய்தி)
5 திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் பணி)
6 உரோமையருக்கு எழுதிய திருமுகம்
7 கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்
8 கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
9 கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்
10 எபேசியருக்கு எழுதிய திருமுகம்
11 பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்
12 கொலோசையருக்கு எழுதிய திருமுகம்
13 தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்
14 தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
15 திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்
16 திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
17 தீத்துக்கு எழுதிய திருமுகம்
18 பிலமோனுக்கு எழுதிய திருமுகம்
19 எபிரேயருக்கு எழுதிய திருமுகம்
20 யாக்கோபு எழுதிய திருமுகம் (யாகப்பர்)
21 பேதுரு எழுதிய முதல் திருமுகம் (1 இராயப்பர்)
22 பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 இராயப்பர்)
23 யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 அருளப்பர்)
24 யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம் (2 அருளப்பர்)
25 யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம் (3 அருளப்பர்)
26 யூதா எழுதிய திருமுகம்
27 யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு

உசாத்துணை


✅Finalised Page