under review

புண்ணொடு வருதல்

From Tamil Wiki

போர் மலைதல் கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. வேந்தன் மனம் மகிழ ஆநிரையை மீட்கும் போரில் கரந்தை மறவன் புண்பட்டு வெற்றியுடன் வருவதைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உலகம் உள்ளளவும் தன்னுடைய புகழை நிலைக்கச் செய்து, மறவன் ஒருவன் கரந்தைப் போரில் தன்னுடல் அழிதற்குக் காரணமான விழுப்புண்ணை ஏற்று வெற்றியுடன் வந்தது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

மண்ணோடு புகழ்நிறீஇப்
புண்ணொடு தான்வந்தன்று(கொளு 2.6)

வெண்பா

வெம் குருதி மல்க விழுப்புண் உகுத்தொறூஉம்
இங்குலிகம் சேரும் வரை ஏய்க்கும் - பைங்கண்
இனம் போக்கி நின்றார் இகல் வாட்டி வேந்தன்
மகன் போல வந்த மகன் (26)

பொருள்: ஆநிரைகளைக் கவர்ந்த வெட்சியாரை வெற்றி கொண்டு தம் ஊருக்கு வந்த கரந்தை மறவர் முகத்திலும் மார்பிலும் ரத்தம் சொரிய நின்ற காட்சி சாதிலிங்கக் குழம்பு சொரிய நின்ற மலையை ஒத்திருந்தது.

உசாத்துணை

கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2025, 09:18:49 IST