under review

புக்கிட் மெர்த்தாஜாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki

புக்கிட் மெர்தாஜாம் தோட்டத்தமிழ்ப்பள்ளி கெடா மாநிலத்தின் கூலிம் வட்டாரத்தில் அமைந்திருக்கிறது.

புக்கிட் மெர்த்தாஜாம் தோட்டத்தமிழ்ப்பள்ளி

வரலாறு

புக்கிட் மெர்தாஜாம் தோட்டத்தமிழ்ப்பள்ளி 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி தோட்டத்தில் அமைந்திருந்த கோவில் வளாகத்தில் இயங்கியது. புக்கிட் மெர்தாஜாம் தோட்டம் துண்டாடப்பட்ட பிறகு, 1990-ம் ஆண்டு தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ரி.ம 8500-க்கு புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது. 1996-ம் ஆண்டு மாணவர் எண்ணிக்கை உயர்வால் பெற்றோர்களின் முயற்சியால் ரி.ம 4100 இணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது. 2016-ம் ஆண்டு பாலர்ப்பள்ளி, கணினி மையம் கொண்ட இணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது. புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி 5 ஏக்கர் நிலத்தில் 4 கட்டிடங்களோடும் ஒரு சிற்றுண்டிச்சாலையோடும் இரண்டு கழிப்பறைகளையும் ஒரு திடலையும் கொண்டு பள்ளி இயங்குகிறது. கூலிம் தொழிற்நுட்பப்பேட்டையின் துரித வளர்ச்சியினால் அதிகமான வீடமைப்புப் பகுதிகள் பள்ளியைச் சுற்றிலும் அமைந்திருக்கின்றன. அப்பகுதிகளிலிருந்து அதிகமான மாணவர்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பகுதியின் 12 கிலோமிட்டர் சுற்றளவில் இப்பள்ளி மட்டும் அமைந்திருப்பதால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்புகின்றனர். சாலைக்கு அருகிலே பள்ளி அமைந்திருப்பதால் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர எளிதாக அமைந்திருக்கிறது.

தலைமையாசிரியர் பட்டியல்

  • 1963 – திரு; ஆறுமுகம்
  • திரு; முனுசாமி
  • 1987 – திரு;கிருஷ்ணன்
  • 1992 – திரு;முனிசாமி
  • 1998 – திரு;தி.ஆறுமுகம் பி.ஜே.கே
  • 1999 – திரு;ஆர்.தி.சங்கர நாராயணன்
  • 2002 – திரு;-ஆர்.சுப்பிரமணியம் பி.ஜே.கே
  • 2004 – திரு.எஸ்.கே.கலைச்செல்வம்
  • 2007 – திரு.ம.முத்துசாமி பி.ஜே.கே
  • 2012 – திருமதி.பி.யவனராணி
  • 2016 – திருமதி.மு.மாரியம்மா
புக்கிட் மெர்த்தாஜாம் தோட்டத்தமிழ்ப்பள்ளி கட்டிட முன்புறம்

பள்ளி முகவரி

SJK(T) Ladang Bukit Mertajam,
Taman Kulim Hi-Tech, 09007 Kulim

உசாத்துணை

  • தும்பி பள்ளி இதழ், 2016
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், 2016


✅Finalised Page