under review

பி. ராமு

From Tamil Wiki
பி. ராமு
பி.ராமு

பி. ராமு (பிறப்பு: 1967) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்(ஆசான்). ஈரோடு அம்மாபேட்டை செட்டு குழுவின் வாத்தியார்.

வாழ்க்கைக் குறிப்பு

பி. ராமு தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் பவானியிலுள்ள அம்மாபேட்டையில் 1967-ல் பிறந்தார். அப்பா கோவிந்தனும் கூத்துக்காரர். தாத்தா காளி கூத்து வாத்தியார். கொள்ளுத்தாத்தா ராமனும் கூத்துக் கலைஞர். பி.ராமு கூத்து இல்லாத காலங்களில் துணி வியாபாரம் செய்தார்.

கலை வாழ்க்கை

பி. ராமுவின் வாத்தியார் கனகராஜ். மாணிக்கம்பட்டி கணேசன் கலைமகள் நாடக சபா, குறுக்குப்பட்டி சேட்டு கலைவாணி நாடக சபா ஆகியவற்றில் கூத்துக்கள் ஆடினார். கர்நாடகம், ராமாபுரம், பழனிமேடு, மாட்டலி, கெளதலி அடுத்து சேலத்தில் வைகுந்தம், சங்ககிரி, தச்சங்கோடு, நாமக்கல், மேச்சேரி, ஓமலூர், ஈரோட்டில் அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் கூத்து ஆடியுள்ளார். பெரும்பாலான இடங்களில் மகாபாரதக் கூத்தும், சில இடங்களில் ராமாயணக்கூத்தும் ஆடியுள்ளார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்துகள்
  • ராமாயணக் கூத்துகள்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 14:10:50 IST