under review

பி. முத்து

From Tamil Wiki
பி. முத்து
p. muthu

பி. முத்து (வெள்ளைக்காரன்) (பிறப்பு: 1947) தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார் (ஆசான்). விழுப்புரம் கள்ளக்குறிச்சியைச் சுற்றியுள்ள பகுதியில் தெருக்கூத்துகள் நடத்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பி. முத்து (எ) வெள்ளைக்காரன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரிலுள்ள மேட்டுச்சேரியில் 1947-ல் பிறந்தார். விவசாயம் செய்து வருகிறார். மகன் முருகனும் தெருக்கூத்துக் கலைஞர்.

கலை வாழ்க்கை

பி. முத்து (எ) வெள்ளைக்காரன் முனுசாமி வாத்தியாரிடம் கூத்து பயின்றார். மூன்று நாடகங்களை அரங்கேற்றினார். சண்முகசுந்தரம், கோணலூர் ஏழுமலை வாத்தியார், பொன்னேந்தல் ராஜகோபால் மூவரின் தெருக்கூத்துகளிலும் தலா மூன்று வருடங்கள் பங்குபெற்றார். அதன்பிறகு தனியாக ஆட்களைச் சேர்த்து கூத்து ஆடினார். பரதக்கூத்துகள் அதிகம் ஆடினார். சிவபுராணம், நாவல்ஸ்கள் ஆகிய கூத்துகள் ஆடியுள்ளார். கிருஷ்ணன், ஈஸ்வரன், நாரதன், பெண் வேடங்களில் நடித்தார்.

கடுக்கனூர் கஞ்சால் நாடகக் குழு, சேனாமலை சண்முக நாடக சபா, கதிர்வேல் தோப்புச்சேரி திருமுருகன் நாடக சபா, பொன்னேந்தல் ராஜகோபால் செல்லியம்மன் நாடக சபா, ஸ்ரீமந்தன் நாராயண நாடக சபா ஆகிய சபாக்களில் கூத்துகளை அரங்கேற்றம் செய்தார். விழுப்புரம் கள்ளக்குறிச்சியைச் சுற்றியுள்ள பகுதியில் கூத்து நடத்தியுள்ளார்.

மாணவர்கள்
  • வீராச்சாமி
  • ஏழுமலை
  • முருகன்
  • கணேசன்
  • கணபதி
  • வீரன்
  • அன்பழகன்

பங்கேற்ற கூத்துகள்

  • பரதக் கூத்து
  • சிவபுராணம்
  • நாவல்ஸ்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம் - கோ. பழனி - சி.முத்துகந்தன்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2024, 09:15:59 IST