under review

பி.என். முருகேசன்

From Tamil Wiki
பி.என். முருகேசன்

பி.என். முருகேசன் (பிறப்பு: 1940) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்(ஆசான்). மகாபாரதக் கூத்துக்கள் மற்றும் தனிக்கூத்துக்கள் ஆடுபவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பி.என். முருகேசன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலுள்ள பெருங்கட்டூரில் 1940-ல் பிறந்தார். தந்தை நடேசன் கூத்துக் கலைஞர். 'கலியுக துரியோதனன்' என்று அழைக்கப்பட்ட கூத்துக் கலைஞர். தாத்தா முனுசாமி மிருதங்கக் கலைஞர். முருகேசன் மூன்றாம் வகுப்பு வரை படித்தார்.

கலை வாழ்க்கை

பி.என். முருகேசனின் வாத்தியார்கள் நடேச கவுண்டர், இருங்கூர் நாராயணசாமி. பி.என். முருகேசன் 1960-ல் தன் முதல் கூத்தை ஆடினார். துரியோதனன், சகுனி, பீமன் ஆகிய வேடங்களில் ஆடினார். தனிக்கூத்தாக 'ரேணுகா சம்பாரம்', 'இரணியவிலாசம்' ஆகியவை ஆடுவார். பெருங்கட்டூர் பொன்னியம்மன் நாடக மன்றம், இருங்கூர் நாராயணசாமி நாடக மன்றம் ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். மகாபாரதத்தின் பதினெட்டு கூத்துகளும் ஆடும் திறமை பெற்றவர்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்து
தனிக்கூத்து
  • ரேணுகா சம்பாரம்
  • இரணியவிலாசம்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்




✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 15:34:10 IST