பிரெஞ்சு புதிய அலை

From Tamil Wiki

’பிரெஞ்சு புதிய அலை’ (French New Wave) என்பது 1950களின் பிற்பகுதியில் தோன்றிய ஒரு பிரெஞ்சு கலை மற்றும் திரைப்பட இயக்கம். இந்த இயக்கம் வழக்கமான சலிப்பூட்டும் மைய நீரோட்ட திரைப்படங்களை தவிர்த்து, பரிசோதனை முயற்சியில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்தது. அதன் வழியே ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, புதிய வழிகளில் கதைகளைச் சொல்வது, காட்சிகளை விவரிக்கும் பாணி மற்றும் அதன் அணுகுமுறைகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. அக்காலகட்டத்தின் அரசியல் சூழலையும், பெரும்பாலும் நிஜ வாழ்வின் பிரச்சினைகளையும் புதிய அலை இயக்குனர்களின் திரைப்படங்கள் பிரதிபலித்தது.

La Pointe Courte (1955)