பிரான்ஸ் காஃப்கா

From Tamil Wiki
Franz Kafka's signature.png
பிரான்ஸ் காஃப்கா (1906)

பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka, 3 ஜூலை 1883 - 3 ஜூன் 1924) இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர்.

பிறப்பு & வாழ்க்கை

பிரான்ஸ் காஃப்கா 3 சூலை 1883 ஆஸ்திரியா-ஹங்கேரி நாட்டின் பிராக் என்ற ஊரில் ஹேர்மன் காஃப்கா மற்றும் ஜூலி காஃப்கா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.

காஃப்கா அவரது பெற்றோரின் ஆறு பிள்ளைகளுள் மூத்தவர். இரண்டு தம்பிகளான ஜார்ஜும் (15 மாதம்), ஹென்ரிக்கும் (ஆறு மாதம்) இறந்துவிட, கப்ரியேல் (எல்லி), வலரி (வல்லி), ஆட்டிலி (ஆட்லா) என மீதமிருந்த மூன்று தங்கைகளும், அவர்களது குடும்பத்தினருடன் சிறுபான்மைக் குடியிருப்புகளுக்கு (Ghetto) நாஸிகளின் காலத்தில் அனுப்பப்பட்டனர். அங்கே அவர்கள் வதை முகாம்களில் இறந்தனர்.

தந்தையுடனான காஃப்காவின் உறவு மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பதை அவர் தனது தந்தைக்கு எழுதிய கடிதங்களில் இருந்து அறிய முடிகிறது. அக்கடிதங்களில், காஃப்கா, தனது தந்தை தன்னைச் சிறுவயது முதலே, பெரிய அளவில் உணர்வு அடிப்படையிலான துன்பங்களுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வேலை

1907-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி அஸிகியூரேசியோனி ஜெனராலி காப்பீட்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து அதில் அவர் ஒரு வருடம் வேலை செய்தார். அந்த நிறுவனத்தில் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை பணியாற்றும் சூழலால் அந்தக் காலகட்டத்தில் அவர் மகிழ்ச்சியற்று இருந்ததை அவரது கடிதங்கள் சுட்டிக்காட்டுகிறது.