பா. கண்மணி
- கண்மணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கண்மணி (பெயர் பட்டியல்)
பா. கண்மணி (பிறப்பு: மே 30, 1967) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
பா. கண்மணி கோ. பாலகிருஷ்ணன், விமலா இணையருக்கு மே 30, 1967-ல் சென்னையில் பிறந்தார். கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.காம் பயின்றார். செப்டம்பர் 14, 1988-ல் க. உலகநாதனை மணந்தார். மகள்கள் ராஷ்மி, யாமினி. தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
பா. கண்மணியின் முதல் புத்தகம் இடபம் நாவல் ஜனவரி 2020-ல் எதிர் பதிப்பகம் மூலம் வெளிவந்தது. ஆதர்ச எழுத்தாளர்களாக ஆதவன், தி.ஜானகிராமனைக் குறிப்பிடுகிறார். இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். இடபம் நாவல் கன்னடத்தில் 2020-ல் க. நல்லதம்பியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. கூலி(gooli) என்ற பெயரில் தேஸிபுஸ்தக பதிப்பாளரால் வெளியிடப்பட்டது.
விருதுகள்
- கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருது 2021-ல் இடபம் நாவலுக்காக வழங்கப்பட்டது.
நூல் பட்டியல்
நாவல்
- இடபம்
இணைப்புகள்
- ரிவால்வார் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் – சாம்ராஜ்: நீலி மின்னிதழ்
- இடபம் நாவல் வாங்க
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Oct-2023, 12:38:49 IST