under review

பாலகும்மி பத்மராஜு

From Tamil Wiki
பாலகும்மி பத்மராஜு

பாலகும்மி பத்மராஜு ( ஜூன் 24,1915 – பெப்ருவரி 17, 1983) தெலுங்கு எழுத்தாளர். இயல்புவாத அழகியல் கொண்டவர். இவருடைய 'கறுப்பு மண்' என்னும் நாவல் தமிழில் வெளிவந்துள்ளது.

பிறப்பு, கல்வி

பத்மராஜு ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் திருப்பதிபுரம் என்னும் ஊரில் ஜூன் 24, 1915-ல் பிறந்தார். பாலகும்மி பத்மராஜுவின் தம்பி பாலகும்மி விஸ்வநாதம் ஒரு வீணைக்கலைஞர், இசையமைப்பாளர். பத்மராஜு அறிவியலில் முதுகலைப் பட்டம்பெற்றார்

தனிவாழ்க்கை

பாலகும்மி பத்மராஜு பி.ஆர்.காலேஜ் காக்கிநாடாவில் 1939 முதல் 1952 வரை அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பாலகும்மி பத்மராஜுவின் முதல் சிறுகதை 'சுப்பி'. அறுபது சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. நான்கு நாவல்கள் எழுதியுள்ளார். 'காலிவான' (காற்றுமழை) என்னும் கதை அவருக்கு பெரும்புகழை அளித்தது. பாலகும்மி பத்மராஜு யதார்த்தவாத - இயல்புவாத அழகியல் கொண்டவர்

திரைவாழ்க்கை

பத்மராஜு 1954-ல் வெளிவந்த 'பங்காரு பாப்பா' என்னும் படத்துக்கான கதைவசனத்தை எழுதினார். 1995-ல் வெளிவந்த 'ஸ்த்ரீ' வரை 12 படங்களுக்கு கதைவசனம் எழுதியிருக்கிறார்.

மறைவு

பாலகும்மி பத்மராஜு பெப்ருவரி 17, 1983 அன்று காலமானார்.

விருதுகள்

  • நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூன் இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு 1952
  • ரங்குல ரத்னம் படத்துக்காக நந்தி விருது 1966
  • பகுதூரபு பாதசாரி படத்துக்காக நந்தி விருது 1983
  • சாகித்ய அக்காதமி விருது 1985

இலக்கிய இடம்

பத்மராஜு தெலுங்கு இலக்கியத்தில் தெலுங்குத்தன்மையை வலியுறுத்தியவர் என்று என்.ஆர். சந்தூர் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

நாவல்கள்
  • படிகின காலேஜ்
  • நல்ல ரெகாடி (கறுப்பு மண்)
  • ராகராஜ்யனிகி ரஹதாரி
  • ரெண்டோ அஹோகுடி முன்னல்ல பாலனா

உசாத்துணை


✅Finalised Page