under review

பாலகிருஷ்ணன்

From Tamil Wiki
பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன் (பிறப்பு: 1942) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்(ஆசான்). கலைமாமணி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பாலகிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலுள்ள கொண்டையார் தண்டலத்தில் 1942-ல் பிறந்தார். ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே கூத்துக்கு வந்ததால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

கலை வாழ்க்கை

பாலகிருஷ்ணனின் வாத்தியார் வரதப்பன். பாலகிருஷ்ணன் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே கூத்தில் பாலகன் வேடம் போட்டார். சிறு சிறு வேடங்கள் போட்டு பின்னர் தோழி வேடம், பின்னர் முக்கிய வேடங்கள் போட்டார். பெண் வேடங்கள், பஃபூன், கிருஷ்ணன் வேடம் ஏற்று நடித்தார். குண்டையார் தண்டலம் வரதப்பன் தெருக்கூத்து மன்றம், குண்டையார் தண்டலம் சின்னக்குழந்தை கம்பெனி ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். அந்தமான், ஹைதராபாத், குஜராத், அரியானா, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கூத்து ஆடினார்.

மாணவர்கள்
  • தட்சிணாமூர்த்தி
  • தேவன்
  • பாபு
  • மாரி
  • சக்திவேல்
  • சேகர்
  • ஏழுமலை

விருது

  • கலைமாமணி விருது மற்றும் மூன்று சவரன் டாலர்
  • சங்கராச்சாரியார் மூலமாக ஐந்து சவரன் டாலர், வெள்ளி

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்து
  • ராமாயணக் கூத்து
  • புராணக் கூத்து

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:37:20 IST