under review

பழைய ஏற்பாடு

From Tamil Wiki


ஆதி மனிதன் ஆதாமின் பிறப்பு முதல் இயேசுவின் பிறப்புக்கு முந்திய காலம் வரை உள்ள தலைமுறையின் வரலாற்றை, குறிப்பாக இறைவாக்கினர்களின் வரலாற்றைக் கூறுவதே பழைய ஏற்பாடு. 1600 ஆண்டு கால இடைவெளியில் சுமார் 40 தீர்க்கதரிசிகளால் இவை எழுதப்பட்டன.

பழைய ஏற்பாடு – விளக்கம்

ஏற்பாடு என்னும் சொல்லுக்கு உடன்படிக்கை, ஒப்பந்தம் என்பது பொருள், இறைவன், பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்களின் தொகுப்பு, பழைய உடன்படிக்கை (பழைய ஏற்பாடு) என அழைக்கப்படுகிறது.

உலகம் படைக்கப்பட்ட காலம் முதல், இயேசு இவ்வுலகிற்கு வரும்வரையான காலப்பகுதியில் இறைவன் மக்களுடன் தொடர்பு கொண்ட முறைகளையும், இஸ்ரயேலரின் வரலாற்றையும் பழைய ஏற்பாடு கூறுகிறது.

பழைய ஏற்பாட்டு நூல்கள்

பழைய ஏற்பாட்டில் மொத்தம் 39 நூல்கள் இடம்பெற்றுள்ளன. அவை, நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

சட்ட நூல்கள் தொடக்க நூல் முதற்கொண்டு இணைச்சட்டம் வரை 5 நூல்கள்
வரலாற்று நூல்கள் யோசுவா முதல் எஸ்தர் வரையுள்ள நூல்கள் 12 நூல்கள்
கவிதை நூல்கள் யோபு முதல் உன்னதப் பாட்டு வரை 5 நூல்கள்
இறைவாக்கு நூல்கள்

(அ) பெரிய இறைவாக்கினர் நூல்கள்

(ஆ) சிறிய இறைவாக்கினர் நூல்கள்

ஏசாயா முதல் தானியேல் வரையுள்ளவை

ஓசியா முதல் மல்கியா வரை

5 நூல்கள்

12 நூல்கள்

மொத்த நூல்களின் தொகுப்பு 39 நூல்கள்
பழைய ஏற்பாட்டின் 39 நூல்கள்
  • தொடக்க நூல் (ஆதியாகமம்)
  • விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)
  • லேவியர் (லேவியராகமம்)
  • எண்ணிக்கை (எண்ணாகமம்)
  • இணைச்சட்டம் (உபாகமம்)
  • யோசுவா
  • நீதித் தலைவர்கள் ஆகமம்
  • ரூத்து (ரூத்)
  • சாமுவேல்-முதல் நூல்
  • சாமுவேல்-இரண்டாம் நூல்
  • அரசர்கள்-முதல் நூல்
  • அரசர்கள்-இரண்டாம் நூல்
  • குறிப்பேடு (நாளாகமம்)-முதல் நூல்
  • குறிப்பேடு (நாளாகமம்)-இரண்டாம் நூல்
  • எஸ்ரா
  • நெகேமியா
  • எஸ்தர்
  • யோபு
  • திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)
  • நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)
  • சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்)
  • இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம், பாட்டு)
  • எசாயா
  • எரேமியா
  • புலம்பல்
  • எசேக்கியல்
  • தானியேல்
  • ஓசேயா
  • யோவேல்
  • ஆமோஸ்
  • ஒபதியா
  • யோனா
  • மீக்கா
  • நாகூம்
  • அபக்கூக்கு
  • செப்பனியா
  • ஆகாய்
  • செக்கரியா
  • மலாக்கி

உசாத்துணை


✅Finalised Page