under review

பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல்(பெருந்திணை)

From Tamil Wiki

பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பரத்தையின் தூதாக வந்தவளிடம் தலைவன் தலைவியிடம் வருதல் உறுதி எனத் தோழி கூறுதல்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உங்கள் இல்லத்திலிருந்து எம் இல்லத்திற்குத் தேரில் ஏறித் தலைவன் வருதல் உறுதி எனப் பரத்தையின் தூதுவரிடம் தலைவியின் தோழி கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

உம்மில் அரிவை உரைமொழி ஒழிய
எம்மில் வலவனும் தேரும் வரும் எனப்
பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று( கொளு 17.15)

வெண்பா

மாணலம் கொள்ளும் மகிழ்நன் தணக்குமேல்
பேணலம் பெண்மை ஒழிக என்பர் - காணக்
கலவ மயில் அன்ன காரிகையார் சேரி
வலவன் நெடும் தேர் வரும் (339)

பொருள் :உன் தலைவியாகிய பரத்தை (தலைவன் தலைவியிடம் செல்லான் எனக்) கூறிய சொல் வீணாகும்படி, தலைவன் தேரில் ஏறி எம்முடைய இல்லத்திற்கு வருவது உறுதி'

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Aug-2025, 19:37:52 IST