under review

பரசுராம கனபாடி

From Tamil Wiki
பரசுராம கனபாடி

பரசுராம கனபாடி (ஆகஸ்ட் 15 , 1914 - ஜனவரி 21, 2016) யஜுர் வேதத்தின் ஒரு பிரிவான சுக்ல யஜுர் வேதத்தில் பண்டிதர். இவரின் தாய் மொழி தமிழ்.

பிறப்பு, கல்வி

பரசுராம ஐயர் கும்பகோணத்திற்கு அருகே உள்ள இஞ்சிகொள்ளை கிராமத்தில் விசாலாட்சி அம்மாளுக்கும் வெங்கடராம ஐயruக்கும் ஆகஸ்ட் 15, 1914-ல் பிறந்தார்.

  • பரசுராம ஐயர் ராமேஸ்வரத்தில் சுப்ரமணிய சாஸ்திரியிடம் சம்ஸ்கிருத அடிப்படைகளை 1924-ம் ஆண்டு கற்றார்.
  • மதுரையில் உள்ள ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி மற்றும் ராம சுப்ப சாஸ்திரியிடம் சமஸ்கிருத காவ்ய பாடங்களை 1925 - 1926-ம் ஆண்டுகளில் கற்றார்.
  • பெங்களூரு ஷாமராஜேந்திர வேதபாடசாலையில் கான்வ குலபதி சிதம்பர கனபாடியிடம் சலாக்ஷ்ன சுக்ல யஜுர் வேத கனாந்தம் மற்றும் க்ரிஹ்ய பாஷ்யத்தையும், நடாங்கத காவ்யம் மற்றும் ஸத பத ப்ராம்மணத்தை 1933 - 1937-ம்ஆண்டுகளில் கற்றார்.
  • திருச்சி பழூர் வேதாந்த பாடசாலையில், சிரோன்மணி எஸ். வி. சுப்ரமணிய சாஸ்திரியிடம் அத்வைத வேதாந்த ப்ரஸ்தானத்ரய பாஷ்யத்தை 1938 - 1942-ம் ஆண்டுகளில் கற்றார்.
  • திருவானைக்கா ஜகத்குரு வித்யா ஸ்தானத்தில் பண்டித ராஜ போலாக்கம் ராம சாஸ்திரிகளிடம் 1943 - 1944-ம் ஆண்டுகளில் தர்க்க சாஸ்திரம் கற்றார்.

வேதப்பங்களிப்பு

பரசுராம கனபாடி ஏராளமான சர்வதேச வேத மாநாடுகளில் கலந்துகொண்டவர்

  • சென்னை சூளை மேட்டில் நடைபெற்ற சுக்ல யஜுர் வேத கன பாராயணங்களிள் தலைமை வகித்தார்.
  • சென்னை, புகளூர், சேங்காளி புரம், அம்பத்தூர், கொல்கத்தா,நாக்பூர், கும்பகோணம் போன்ற இடங்களில் நடைபெற்ற சம்ஹிதா ஹோமங்களில் கலந்து கொண்டார்.

நூல்கள்

பரசுராம கனபாடி வேதம்படிக்கும் மாணவர்களுக்குப் புத்தகங்களாக வெளியில் கிடைக்காத பின் வருவனவற்றை கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டார்.

  • வேத - பதம், கிரமம், ஜடா
  • சதபத பிராமணம்
  • பூர்வ, அபரபிரயோகம்
  • ஆனந்த ராமாயணம்
  • சம்ஹிதா ஹோம பதாதி

இவர் எழுதிய சதபத பிராமணம் என்ற கையெழுத்துப் பிரதி புத்தகமாக சாந்திபனி ராஷ்ட்ரிய வேதவித்தியா பிரதிஸ்தானம், உஜ்ஜயினியில், சென்னை முன்னாள் சம்ஸ்கிருத கல்லூரி முதல்வர் எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி முன்னிலையில், நாக்பூர் சம்ஸ்கிருத கல்லூரி பேராசிரியர் ஜி. டபிள்யு. பிம்லாபுரே அவர்களால் வெளியிடப்பட்டது.

மறைவு

ஜனவரி 21, 2016-ல் மறைந்தார்

விருதுகளும், பட்டங்களும்

  • பரசுராமனின் சம்ஸ்கிருத பண்டிதத்திற்காகவும் மற்றும் சாஸ்திர அறிவிற்காகவும் அப்போதைய குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் ஜனாதிபதி விருது வழங்கினார் - (1998)
  • சலக்ஷன கனாந்த - கிருக் - யக்ன வித்வான் - (1934) மைசூர்
  • ஸ்மார்த்த பிரயோக வித்வான் - (1936), மைசூர்
  • வேத கோவிதா - (1937) பூனா
  • வைதீக ரத்ணம் - காசி பண்டித சபா - (1944) வாரணாசி
  • மஹா பெரிவாள் சதாப்தி விருது - (1980) காஞ்சி
  • வேதபாஸ்கரா விருது - வேதபாராயண டிரஸ்ட் - (2000) சென்னை
  • ஷீர ஷாகர மாகாராஜ் சாமிகள் விருது - அகமத் நகர்
  • கங்கேஸ்வரானந்தஜி டிரஸ்ட் விருது - (2004) நாசிக்
  • வேத பாஷ்ய ரத்திணம் விருது - (1964) காஞ்சி
  • பிரும்மரிஷி - மஹா சாமிகள் - (1990) காஞ்சி
  • கிருத் யக்ஞ விருது - வேதபரிபாலன சபா - (1997) குடந்தை
  • வேத பூஷணா விருது - சம்ஸ்கிருத கல்லூரி - (2007) சென்னை
  • மஹாஸ்சுவாமிகள் 100-ம் ஆண்டு புறஸ்கார் - (2007) சென்னை
  • வேத ஸ்ரீ விபூஷிதா விருது - (2007) சென்னை
  • ஸ்ரெளதிகுல திலகம் - ஸ்ரீரங்கம் ஆண்டவர் சாமி - (2009) சென்னை
  • கான்வகுலபதி - செல்வ விநாயகர் டிரஸ்ட் - (2008) அம்பத்தூர்
  • வேத சாம்ராட் - யாக்ஞவல்கிய ஸபா - (2008) சென்னை
  • கங்கேஸ்வரானந்தஜி வேதரத்ண புரஸ்கார் - (2010) சென்னை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Sep-2023, 07:54:24 IST