பபூன் ராமசாமி
From Tamil Wiki
- ராமசாமிப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமசாமிப் (பெயர் பட்டியல்)
பபூன் ராமசாமி (பஃபூன் ராமசாமி) பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பபூன் ராமசாமி தூத்துக்குடியைச் சேர்ந்தவர். நாடகத்திலிருந்து விலகியபின் வேறு வேலைகள் செய்தார்.
நாடக வாழ்க்கை
பபூன் ராமசாமி சங்கரதாஸ் சுவாமிகளின் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் ஒரே நகைச்சுவை நடிகராக இருந்தார். நாடகத்தில் அவசியமாகக் கருதப்பட்ட பஃபூன்(buffoon, கோமாளி) வேடத்தில் நாடகத்தின் இடையில் அடிக்கடி வந்து பாடுவார். இவர் ஆஞ்சனேயராக நடிப்பதற்கென்றே 'இலங்காதகனம்' நாடகத்தை சங்கரதாஸ் சுவாமிகள் தயாரித்தார். கம்பெனி பூவிருந்தவல்லியில் இருந்தபோது நாடகத்திலிருந்து விலகினார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2024, 08:15:22 IST