under review

பத்மா இளங்கோவன்

From Tamil Wiki
பத்மா இளங்கோவன்

பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) (ராணி மகேசு) (பொ.யு. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், இதழாசிரியர். சிறுவர் கதைப்பாடல்கள், கதைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பத்மா இளங்கோவன் இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்ததார். மூத்த எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனின் மனைவி. தற்பொழுது பிரான்ஸில் வாழ்ந்து வருகிறார்.

இதழியல்

பத்மா இளங்கோவன் 'பரிசு' சிறுவர் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பத்மா இளங்கோவன் கல்லூரிகாலத்தில் எழுதத் தொடங்கினார். 'ராணி மகேசு' என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். கவிதை, கட்டுரை, சிறார் இலக்கியங்கள் எழுதினார். இவரின் ஆக்கங்கள் இலங்கை வானொலி, ஈழநாடு, தினகரன், தினபதி மற்றும் பாரிஸில் வெளியாகும் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் வெளிவந்துள்ளன.

விருதுகள்

  • தமிழகத்தில் சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறுவர் இலக்கியப் பணிக்கான பரிசு பெற்றார்.

இலக்கிய இடம்

”சிறுவர் இலக்கியத்தளத்தில் தனக்கென்றோர் தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் பத்மா இளங்கோவனின் இன்னொரு நூலான செந்தமிழ் சிறுவர் பாடல் என் பார்வையில் பதிந்தபோது, பல பாடல்களை இலகுவான நடைதனில் மிகவும் நுணுக்கமாகவும், இலாவகமாகவும் கருத்துச்செறிவு அங்கங்கே கண்சிமிட்ட, ஓசைநயம் மெட்டமைக்க எல்லாப் பாடல்களுமே விரைந்து சென்று குழந்தைகளின் உள்ளங்களில் கொலுவிருக்கக்கூடியதாக வடிவமைத்துள்ளார்.” என இரா. சம்பந்தன் மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • குற்றவாளிக்கூண்டில் கவிஞர் கண்ணதாசன்
  • செந்தமிழ் மழலைப் பாடல்கள்
  • செந்தமிழ் பாப்பாப் பாடல்கள்
  • செந்தமிழ் சிறுவர் பாடல்
  • பிள்ளைப்பாடல்கள்
  • மழலைப்பாடல்கள்

உசாத்துணை


✅Finalised Page