under review

ந.மு. கோவிந்தராய நாட்டார்

From Tamil Wiki
ந.மு. கோவிந்தராய நாட்டார்

ந.மு. கோவிந்தராய நாட்டார் (ந.மு. கோவிந்தராச நாட்டார்; ந.மு.கோ. நாட்டார்) (ஆகஸ்ட் 23, 1896 - ஆகஸ்ட் 23, 1977) தமிழ்ப் புலவர், கல்வியாளர், ஆய்வாளர், எழுத்தாளர். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ந.மு. கோவிந்தராய நாட்டார், ஆகஸ்ட் 23, 1896 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரியில், முத்துச்சாமி நாட்டார் - தைலம்மையார் இணையருக்குப் பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். தந்தையிடமிருந்து நீதி நூல்களையும், பிற இலக்கிய, இலக்கண நூல்களையும் கற்றார். ஆங்கிலத்தில் புலமை பெற்றார். சென்னைப் பல்கலைகழகத்தில் உயர்கல்வி கற்றுப் பட்டம் பெற்றார். தஞ்சை மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். திருமண வாழ்க்கை குறித்த விவரங்களை அறிந்துகொள்ள இயலவில்லை.

ந.மு. கோவிந்தராய நாட்டார் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ந.மு. கோவிந்தராய நாட்டார், தமிழர் கலை, பண்பாடு, தமிழ் மக்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் ஈடுபாடும். ஆராய்ச்சி நோக்கமும் கொண்டு செயல்பட்டார். 'தமிழ்ப் பொழில்' போன்ற இலக்கிய இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். இலக்கண, இலக்கிய நூல்களை எழுதினார். தஞ்சாவூரில் உள்ள இராஜராஜன் சமயச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

நாடகம்

ந.மு. கோவிந்தராய நாட்டார், ராஜேந்திர சோழன் குறித்து, 'இராசேந்திரன்' என்ற நாடக நூலையும், நக்கீரர் குறித்து 'நக்கீரர்' என்ற நாடக நூலையும் எழுதினார்.

மறைவு

ந.மு. கோவிந்தராய நாட்டார், ஆகஸ்ட் 23, 1977 அன்று, தனது 81-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

ந.மு. கோவிந்தராய நாட்டார் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்ற அறிஞர். இலக்கண ஆய்வுகளிலும், வரலாற்று ஆய்வுகளிலும் ஈடுபட்டார். ஆய்வு நூல்களை எழுதினார். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கட்டுரைகளை, நூல்களை எழுதினார். தமிழ்ப்புலவர், எழுத்தாளர், கல்வியாளர், வரலாற்றறிஞர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

ஆய்வு நூல்கள்
  • உலகப் பொதுத்தமிழ் எழுத்தொலி நூல்
  • திருவையாற்றின் ஏழூர்த் திருவிழா வரலாறும் ஏழூர்த் தேவாரத் திருப்பதிகங்கள் முதலியனவும்
செய்யுள் நூல்
  • கண்ணுதல் நின் கால் விளையாட்டு
வாழ்க்கை வரலாறு
  • பகவான் ஸ்ரீ எடையூர் சித்தலிங்கேஸ்வரசுவாமி அவர்களின் ஜீவன சரித்திரம்
நாடகம்
  • இராசேந்திரன்
  • நக்கீரர்
ஆங்கில நூல்கள்
  • An Introduction to Universal Tamil Phonetics (or) Where George Bemad shaw erred English
  • The greatness of Tamil Language, Literature and culture (or) why does Tamilnad appose imposition of Hindi ?

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jan-2026, 11:13:41 IST