under review

நா.வை. விசுவலிங்கம்

From Tamil Wiki
நா.வை. விசுவலிங்கம் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

நா.வை. விசுவலிங்கம் (பிறப்பு: ஜூன் 1, 1930) ஈழத்து இசை நாடகக் கலைஞர். தவில் வித்துவான். நாடகங்கள் பல நடித்தார். நாடகம் , வில்லுப்பாட்டு, கதாபிரசங்கம், மிருதங்க கச்சேரி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை நயினாத்தீவில் ஜூன் 1, 1930-ல் நா.வை. விசுவலிங்கம் பிறந்தார். ஆரம்பக்கல்வியை நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாசாலையில் பயின்றார். ஆங்கிலக்கல்வியை அரசினர் ஆங்கிலப்பாடசாலையில் பயின்றார். 1944-ல் சிரேஷ்டதராதரப் பரிட்சையும், 1956-ல் உயர்தரப்பரிட்சையிலும் தேர்ச்சி பெற்றார். அக்டோபர் 1, 1947 முதல் தபால் இலாகாவில் நிரந்தர ஊழியராகி பதின்மூன்று வருடங்கள் பணியாற்றினார். 1958-ம் ஆண்டிலிருந்து பொ.எ.வி. சேவையில் சேர்ந்து மட்டக்களப்பு, கொழும்பு, மன்னார் குருனாகல், திருகோணமலை ஆகிய இடங்களிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார்.

கலை வாழ்க்கை

1942-ல் மூளாய் ஆறுமுகம் அவர்களிடம் தவில் பழகினார். 1950-ல் யாழ் முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள நாடகக் கல்லூரியில் நாடகம் பயின்றார். 1952-களில் சங்கீதபூசணம் ஏ.எஸ். ராமநாதன் அவர்களிடம் மிருதங்கம் கற்றுக் கொண்டார். நாடகம் , வில்லுப்பாட்டு, கதாபிரசங்கம், மிருதங்கம் நிகழ்ச்சிகளை நடத்தினார். இலங்கை வானொலியிலும் நிழ்ச்சிகள் நடத்தினார்.

இணைந்து நடித்தவர்கள்
  • நா. கணபதிப்பிள்ளை
  • சபா ஆனந்தர்
  • வித்துவான் சி. குமாரசாமி
  • ப.க. பரமலிங்கம்
  • க.க. சந்திரன்
  • சி. நடேசபிள்ளை
  • சண்முகராசா
  • வித்துவான் ப.க. காமாட்சி சுந்தரன்
  • புலவர் அரியதாயகம்
  • நா.க. சண்முகநாதபிள்ளை
  • இ. கனகசபை
  • பண்டிதர் நா. சுந்தசாமி

விருதுகள்

  • 1964 முதல் 1970 வரை திருகோணமலை ஆலயத்தில் மிருதங்கம் வாசித்து "மிருதங்கமாமணி" "மிருதங்க சாகரச்சுடர்" "மிருதங்கவிற்பன்னர்" என்ற பட்டங்களையும், "லயஞான வித்தகர்" என்ற பெயரையும் பெற்றார்.

நடித்த நாடங்கள், பாத்திரங்கள்

  • சத்தியவான் சாவித்திரி - சத்தியவான்
  • யவீன யமதர்மபார் - யமன்
  • சகுந்தலா - துஷ்யந்தன்
  • வாழ்க்கைப்படகு - தகப்பன்
  • வேலைக்காரி - வில்லன்
  • சுப்பிரமணியபாரதி - பாரதி
  • வீரபாண்டியகட்டபொம்மன் - கட்டப்பொம்மன்
  • அடங்காப்பிடாரி - பிடாரி
  • வாடகைவீடு - தகப்பன்
  • பாதுகாபட்டாபிஷேகம் - தசரதர்
  • காத்தவராயன் - பூமாதேவி, கழுக்காத்தான்

பழக்கிய கூத்துக்கள்

  • வாலிவதம்
  • நொண்டிநாடகம்
  • காத்தவராயன்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Oct-2023, 14:47:24 IST