நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளை
- அமிர்தம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அமிர்தம் (பெயர் பட்டியல்)
- நாச்சியார்கோவில் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாச்சியார்கோவில் (பெயர் பட்டியல்)
நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளை(1819 - 1904) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகே உள்ள திருநறையூரில் 1819-ம் ஆண்டு ஷண்முகம் என்ற நாதஸ்வரக்காரரின் மகனாகப் பிறந்தார். இவருக்கு சிவானந்தம் என்ற தம்பியும் அம்புஜம் என்ற தங்கையும் இருந்தனர்.
தனிவாழ்க்கை
அமிர்தம் பிள்ளை திருநறையூரைச் சேர்ந்த சின்னம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரே மகன் தங்கவேல் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்; ஒன்பது மகள்கள். நால்வர் சிறுவயதிலேயே காலமாகி விட்டனர்.
மகள்கள்:
- கௌரியம்மாள் - கணவர்: கரந்தை ரத்தினம் பிள்ளை (தவில்)
- அஞ்சுகம் - கணவர்: கரந்தை ரத்தினம் பிள்ளையின் தம்பி வேணுகோபாலன்
- அம்மாப்பொண்ணு - கணவர்: கூறைநாடு குமாரஸ்வாமி பிள்ளை (நாதஸ்வரம்)
- காமக்ஷி - கணவர்: திருப்புகலூர் வேணுகோபாலப் பிள்ளை (தவில்)
- பரிபூர்ணம் - கணவர்: நாச்சியார்கோவில் கிருஷ்ணன் பிள்ளை (நாதஸ்வரம்)
இசைப்பணி
அமிர்தம் பிள்ளை, வலங்கைமான் சொக்கலிங்கம் பிள்ளை என்பவருடன் சேர்ந்து நாதஸ்வரம் வாசித்தார். இவ்வாறு இரட்டை நாதஸ்வரம் வாசிக்கும் வழக்கம் மறைந்துபோய் மீண்டும் திருப்பாம்புரம் சகோதரர்களால் வழக்கத்தில் வந்தது.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- நீடாமங்கலம் கோவிந்தப் பிள்ளை
- ஸ்ரீவாஞ்சியம் கோவிந்த பிள்ளை
இவ்விருவரில் ஒருவரது தவில் இல்லாமல் அமிர்தம் பிள்ளை நாதஸ்வரக் கச்சேரி செய்ததில்லை.
மறைவு
நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளை 1904-ம் ஆண்டு காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 06:08:16 IST