நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர்
From Tamil Wiki
- நம்பி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நம்பி (பெயர் பட்டியல்)
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் (1857-1921) ஈழத்து தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், பதிப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 1857-ல் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1904-ல் 'அழகவல்லி' என்ற நாவலை எழுதினார். 'சுந்தரன் செய்த தந்திரம்' இவரின் இரண்டாவது நாவல். 'எஸ்தாக்கியர் நாடகம்', 'பாலியக் கும்மி' ஆகிய நூல்களை எழுதினார். ஈழநாட்டின் முதல் நாவலெனக் கருதப்படும் ’ஊசோன் பாலந்தை’ கதையை அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891-ல் பதிப்பித்தார். 'மேகவர்ணன்', 'தாமோதரன்', 'இரத்தின சிங்கம்', 'சந்திரகாசன் கதை' ஆகிய நாவல்களையும் பதிப்பித்தார்.
இறப்பு
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1921-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- எஸ்தாக்கியர் நாடகம் (1890)
- பாலியக் கும்மி (1886)
நாவல்கள்
- அழகவல்லி (1904)
- சுந்தரன் செய்த தந்திரம் (1905)
பதிப்பித்தவை
- மேகவர்ணன்
- தாமோதரன்
- இரத்தின சிங்கம்
- சந்திரகாசன் கதை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 06:31:04 IST