under review

நசரேய புராணம்

From Tamil Wiki

நசரேய புராணம் (1950) ஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை எழுதிய கிறிஸ்தவ காவியம். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகச் சொல்லும் செய்யுள் நூல்.

எழுத்து, வெளியீடு

இந்நூலை ஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை 1950-ல் எழுதினார்.

உள்ளடக்கம்

நசரேய புராணம் 23 படலங்கள் கொண்டது. காண்டப் பகுப்பு இல்லை.

  • சிருஷ்டிப்பு படலம்
  • பூங்காவனப் படலம்
  • வேதாளன் சதிப்ப்படலம்
  • இரட்சணிய வாக்குப் படலம்
  • திரித்துவ ஆலோசனைப் படலம்
  • திரு அவதாரப் படலம்
  • நாசரேத்து படலம்
  • ஞான தீட்சைப்படலம்
  • உபவாசப்படலம்
  • அற்புதப்படலம்
  • ஆலய சுத்திகரிப்புப் படலம்
  • திருவிருந்துப் படலம்
  • பிடிபட்ட படலம்
  • விசாரணைப் படலம்
  • கேவலா வதைப் படலம்
  • கல்வாரிப் படலம்
  • உயிர்த்தெழுந்த படலம்
  • தரிசனப் படலம்
  • ஆரோகணப் படலம்
  • ஆவி இறங்கு படலம்
  • அப்போஸ்தல ஊழியப் படலம்
  • துன்புறுத்து படலம்
  • திருச்சபை படலம்

அறுசீர் ஆசிரிய விருத்தம், எண்சீர் ஆசிரிய விருத்தம், நிலைமண்டில ஆசிரியப்பா, கலித்துறை, கட்டளைக் கலிப்பா, கலி விருத்தம், வஞ்சி விருத்தம் ஆகிய யாப்புகளில் இவை அமைந்துள்ளன

இலக்கிய இடம்

கிறிஸ்தவக் காப்பியங்களில் பெரும்பாலானவை புதிய ஏற்பாட்டை ஆதாரமாகக் கொண்டு மட்டுமே படைக்கப்படுகின்றன. நசரேய புராணம் விவிலியத்தின் முதல் நூலான ஆதியாகமம் தொடங்கி அப்போஸ்தல நடபடிகள் வரையான செய்திகளை முழுமையாக அளிக்கிறது என யோ.ஞானசந்திர ஜான்சன் இந்நூலை மதிப்பிடுகிறார்.

உசாத்துணை

  • கிறித்தவக் காப்பியங்கள். யோ. ஞானசந்திர ஜான்சன்


✅Finalised Page