தெய்வசிகாமணிப் பிள்ளை
From Tamil Wiki
- தெய்வசிகாமணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தெய்வசிகாமணி (பெயர் பட்டியல்)
தெய்வசிகாமணிப் பிள்ளை (பொ.யு.1804-1846) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
தெய்வசிகாமணிப் பிள்ளை பொ.யு. 1804-ம் ஆண்டு திண்டுக்கல்லில் வேளாளர் சாதியில் கிறிஸ்தவ மதத்தில் வேத தேசிகரான அந்தோணிமுத்துவுக்கு மகனாகப் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
தெய்வசிகாமணிப் பிள்ளை இளமையில் 'இன்பமணிமாலை', 'ஸ்தோத்திரக்கும்மி' என்னும் இரு பாடல்களை இயற்றினார். கொழும்பு சைமன் காசிச்செட்டி நடத்திய 'உதயாதித்தன்' என்ற பத்திரிக்கையில் இவை பிரசுரமாயின.
மறைவு
தெய்வசிகாமணிப் பிள்ளை 1846-ல் காலமானார்.
நூல்பட்டியல்
- இன்பமணிமாலை
- ஸ்தோத்திரக்கும்மி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Nov-2023, 07:18:36 IST