தென்காசி கோவில் கல்வெட்டுகள்
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் 52 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகள் கோவில் கட்டுமானம், கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தம், நிர்வாக முறை, அரசர் முடிசூட்டிய நிகழ்வு, இறப்பு ஆகியவற்றை பற்றிப் பேசுகின்றன. இக்கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழில் அமைந்தவை. இக்கல்வெட்டுகள் பொ.யு. 1445 -1605 க்கு இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டுகள்
திருவிதாங்கூர் தொல்லியல் வரிசை
திருவிதாங்கூர் தொல்லியல் வரிசை (Travancore Archeological Series) திருவிதாங்கூர் அரசவையின் சிற்பவியல் அறிஞரான டி.ஏ. கோபிநாத ராவால் தொகுக்கப்பட்டது. இதில் தென்காசி கோவிலில் உள்ள எட்டு கல்வெட்டுகள் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன.
| அமைவிடம் | மொழி | பொறிக்கப்பட்ட ஆண்டு | அரசன் பெயர் | காரணம் | விளக்கம் | |
|---|---|---|---|---|---|---|
| 1 | கோபுரம் - உடைந்த முன்பகுதி | தமிழ் | சக ஆண்டு 1368 வைகாசி 10 | அரிகேசரி பராக்கிரம பாண்டியன் | அர்ச்சனா சடங்கு நிவந்தம் | பராக்கிரம பாண்டியன் சக ஆண்டு 1369-ல் (பொ.யு. 1447) இறந்திருக்கிறான். இவன் கோபுர அடிஸ்தான வேலையை ஆரம்பித்ததன் தொடர்பான 63 வரிகள் கொண்ட இக்கல்வெட்டு மெய்கீர்த்தி பாணியில் அமைந்தது. |
| 2 | கோபுரத்தின் முன்புள்ள கல்தூணில் நான்கு பக்கமும் | இக்கல்வெட்டு கோவில் கட்டப்பட்டது தொடர்பான செய்தி உள்ளது. காசி கோவில் பாழடைந்து வருவதால் தனக்கு ஒரு கோவில் கட்டும் படி பராக்கிரம பாண்டியன் கனவில் சிவன் தோன்றி கூறுகிறார். அதன்படி அரசன் ஒரு கோவிலை சக ஆண்டு 1368-ல் (பொ.யு. 1446-ல்) கட்டத் தொடங்குகிறார். சிவன் கோவில், உலகம்மை கோவில், சாஸ்தா, அரிகேசரி நங்கை, பிடாரி கோவில் கட்டினார். மடப்பள்ளி, ஆராட்டு மண்டபம் கட்டியதும், பரிவார தெய்வங்களை அமர்த்தியதும் இதே காலத்தில் தான். கோபுர வேலை வைகாசி 22-ல் ஆரம்பானது. கோவில் இறைவன் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் சித்திரா நதியில் முழுக்காட்டிய பின் கொண்டுவரப்பட்டது. அரசர் கோவிலுக்கு நிறைய நிவந்தங்கள் கொடுத்துள்ளார். தென்காசி, இலஞ்சி, குன்றக்குடி, புலியூர், வீரபாண்டிய நல்லூர் ஆகிய இடங்களில் வயல்களும், தோட்டங்களும் இலவசமாகக் கொடுத்தார். இச்செய்தியை குறிக்கும் கல்வெட்டு வெட்டும் போது 18 நாட்டு வெள்ளாளரும், இரண்டு இடங்களில் உள்ள பத்திரி வகையும் ஐந்து வகை பரிகாரமும் கூடி பேசினர் எனக் கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு தற்போது கோவில் முன்பகுதி வளாகத்தில் இடப்புறம் உள்ளது. | ||||
| 3 | கோபுரம் - வடக்கு சுவர் | அழகம்பெருமாள் குலசேகரன் அல்லது அரிகேசரி பராக்கிரம பாண்டியன் | அண்ணன் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் கோபுர வேலையை பாதியில் முடித்ததை தம்பி அழகம்பெருமாள் குலசேகரன் செய்து முடித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. | |||
| 4 | கோபுரம் - தெற்கு சுவர் | தமிழ் | சக ஆண்டு 1474 சித்திரை 29 பரிதாபி ஆண்டு - ரோகிணி நட்சத்திரம் (பொ.யு. 1552) | தமிழன் நெய்வேலிமாறன் அல்லது வீரவேல் என்ற குலசேகரப் பாண்டியன் | இவ்வரசன் முடிசூட்டிய செய்தியை கல்வெட்டு கூறுகிறது | |
| 5 | கோபுரம் - தெற்கு | தமிழ் | சக ஆண்டு 1486 சித்திரை மாதம் ரத்தாட்சி புனர்பூச நட்சத்திரம் (பொ.யு. 1564) | அதிவீர ராம பாண்டியன் | அழகன் சீவலவேள் முடிசூடிய நிகழ்வு | |
| 6 | கோபுரம் - வடக்கு முன்பகுதி | தமிழ் | இக்கல்வெட்டு 5 தமிழ் பாடல்களைக் கொண்டது.
| |||
| 7 | மகாமண்டபம் - வடக்கு | சமஸ்கிருத மொழி (கிரந்த எழுத்தில் 3 பாடல்கள்) | சக ஆண்டு 1537 (பொ.யு. 1615) | வரகுணஸ்ரீவல்லபன் என்ற குலசேகரன் | கோவிலினுள் நடந்த யாகம் பற்றிய செய்தி. பாண்டியன் சத்திரிய வம்சத்தினராக யாகத்தில் குறிப்பிடப்படுகிறான். | |
| 8 | கோபுரம் | தமிழ் - கிரந்த கலப்பு | சக ஆண்டு 1518 (பொ.யு. 1598) - துர்முகி ஆண்டு புரட்டாசி 8 செவ்வாய் கிழமை | பெருமாள் அழகன்பெருமாள் அதிவீரராமன் அல்லது ஸ்ரீவல்லபன் | சித்திரை மாத பரணி விழாவிற்கு நிவந்தம், உலகம்மையின் அபிஷேகச் சடங்கு நிவந்தம். பக்தர்களின் காணிக்கை கோவிலுக்கே சேர வேண்டும். இதற்காக நில நிவந்த விவரம் உள்ளது. |
தமிழக தொல்லியல் ஆவணம்
வி. ரங்காசாரியாரால் முதன்முதலில் தென்காசி கோவில் கல்வெட்டுகள் பிரதி எடுத்துத் தொகுக்கப்பட்டது (பொ.யு. 1895 - 1909). அதன் விவரம்,
| அமைவிடம் | மொழி | பொறிக்கப்பட்ட ஆண்டு | அரசன் பெயர் | காரணம் | விளக்கம் | |
|---|---|---|---|---|---|---|
| 1 | முகமண்டபம் - மேற்கு சுவர் | தமிழ் | சக ஆண்டு 1381 ஆனி மாதம் 28-ம் தேதி புதன் கிழமை (பொ.யு. 461 ஜுன் 17) | அரிகேசரி தேவன் அல்லது பராக்கிரம பாண்டியன் தேவர் | நிவந்தம் சர்வ மான்ய மடப்புறம் | மதப்பிரச்சாடம் செய்யும் மடபதி தத்துவப் பிரகாசனுக்கு மடப்புரமாக லாகூரில் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலம் கத்தும்சேரி பத்து, நல்லூர் பத்து ஆகிய இடங்களில் உள்ளன |
| 2 | முன்மண்டபம் - தெற்கு சுவர் | தமிழ் - கிரந்தம் கலப்பு | ஆட்சியாண்டு 31 ஆடி மாதம் 21 திங்கட்கிழமை (பொ.யு. 1454 ஜூலை 8) | ஜடிலவர்மன் தீபராக்கிரமபாண்டியன் | அரசன் இரண்டு கிராமங்களை நிவந்தமாக அளித்தல் | விஸ்வநாதன் - உலகம்மைக்கு சடங்குகள் நடத்த நிலம் செங்கோட்டை, இலத்தூர், பைம்பொழில் ஆகிய இடங்களை நிவந்தம் அளித்தல். இக்கல்வெட்டில் நில எல்லை விரிவாகப் பேசப்படுகிறது |
| 3 | முன்மண்டபம் - தெற்கு சுவர் | தமிழ் - கிரந்த கலப்பு | ஆடி மாதம் 30 தேதி திங்கட்கிழமை (பொ.யு. 1484 ஜுலை) | மாறவர்மன் வீரபாண்டிய தேவன் | நிவந்தம் | விஸ்வநாதன் திருப்பணிக்காக அமுதுபடி நாழி, பருப்பு, சர்க்கரை, தேங்காய், நெய், நிலம் பத்து நிவந்தம் |
| 4 | முன்மண்டபம் தெற்கு சுவர் | தமிழ் - கிரந்த கலப்பு | சக ஆண்டு 1395 தை மாதம் 7-ம் தேதி திங்கட்கிழமை (பொ.யு. 1474 ஜனவரி 2) | அழகன்பெருமாள் குலசேகர தேவன் | கோவில் கட்டுமானப் பணி உபானம் ஸ்தூபி வேலை கோபுரத்தில் நடந்தது. | திருஓலக்க மண்டபம் புதிதாகக் கட்டப்பட்டது. கோவிலில் பணியாற்றிய மூன்று பிராமணர்களுக்கு வீடு கொடுத்தல் இதற்கு இறையிலியாக விதி விலக்கு அளித்தல் |
| 5 | முன்மண்டபம் - தெற்கு சுவர் | தமிழ் - கிரந்த கலப்பு | சக ஆண்டு 1395 மாசி 15 புதன்கிழமை (பொ.யு. 1474 பெப்ரவரி 9) | அழகன்பெருமாள் குலசேகர தேவன் | நிவந்தம், கோபுரப்பணி | திருவாழி ஸ்ரீரங்கராஜன் பிரம்மாதிராயர் பொலிந்து நின்றருளிய கோவிலில் கட்டுமானப் பணி செய்தார். இவர் காஷ்யப கோத்திரம், ஆவல்யான கோத்திரம். இவர் இக்கோவிலுக்கு நிவந்தம் கொடுத்த செய்தி |
| 6 | முன்மண்டபம் - தெற்கு சுவர் | தமிழ் - கிரந்த கலப்பு | சக ஆண்டு 1457 கார்த்திகை மாதம் 23 திங்கள்கிழமை (பொ.யு. 1535) | நிவந்தம் | இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது. கோவில் பணியாளர்களுக்கு வீடுகள் நிவந்தம் கொடுக்கப்பட்டது பற்றி குறிப்புள்ளது. | |
| 7 | நுழைவுவாயில் மண்டபம் - வலது புறம் | தமிழ் - கிரந்த கலப்பு | சக ஆண்டு 1384 ஆடி 5 சனிக்கிழமை (பொ.யு. 1462 ஜூலை 3) | அரிகேசரி பராக்கிரம பாண்டியன் | நிவந்தம் | செட்டி ஆண்டபிள்ளை என்ற பணியாளருக்கு இறையிலி நிலம் கொடுத்தது. |
| 8 | கோவில் முன் வராண்டா சுற்றுச்சுவர் | தமிழ் - கிரந்தம் | சக ஆண்டு 1485 மாசி 10 திங்கள்கிழமை (பொ.யு. 1563) | பெருமாள் திருநெல்வேலிப் பெருமாள்; தர்ம பெருமாள்; ஜடிலவர்மன் மகன் குலசேரதேவன்; கோனேரி கொண்டான் அபிராம பராக்கிரம பாண்டியன் | நிவந்தம் | நிவந்த நிலம் கோவில் பணியாளனுக்கு வீட்டுமனை காணிக்கையாகக் கொடுக்கபப்ட்டது. அரசன் இதில் வீரவெண்பா மலையன் எனப்படுகிறான். |
| 9 | கோவில் முன் வராண்டா சுற்றுச்சுவர் | தமிழ் - கிரந்தம் | சக ஆண்டு 1505 சுபா வருடம் கார்த்திகை 19 வியாழன் (பொ.யு. 1583 நவம்பர் 28) | ஜடிலவர்மன் அதிவீரராமன் ஸ்ரீவல்லபன் | நிவந்தம் | கல்வெட்டு முழுமைப் பெறவில்லை. பணியாளர்களுக்கு வீட்டுமனை நிவந்தம் கொடுத்தது. கோவில் பணியாளர்கள் பெயர் சில உள்ளன; கணக்கு பெரிய உடையான். ஓலை எழுத்து கணக்கு திருக்குற்றால முடையான்; பணியாளர்களுக்கு செய்த பணியின் பெயர்கள்: ஆலயக் கணக்கு, முத்திரைக் கணக்கு, தவணைக் கணக்கு, ஓலை எழுதியவன். |
| 10 | கோவில் முன் வராண்டா சுற்றுச்சுவர் | தமிழ் - கிரந்தம் | பொ.யு. 1488 | பராக்கிரம பாண்டிய தேவன் | வீட்டுமனை நிவந்தம் | கோவில் சடங்குகளை மேற்பார்வையிட்ட பண்ணையூர் பிரணாநந்தர் என பலருக்கு வீட்டுமனை நிவந்தம் வழங்கியது. |
| 11 | கோவில் முன் கல்பலகை | தமிழ் - கிரந்தம் | சக ஆண்டு 1387 தை 29 சனிக்கிழமை (பொ.யு. 1466 ஜனவரி) | பெருமாள் குலசேகர தேவர் | நிவந்தம் | கோவில் பரிவார தெய்வங்களுக்கு பூஜை பொருள் நிவந்தம். இங்கே பணிப்புரிந்தவர்களில் ஐவகை சாதிகள் இருந்தனர். இவர்களில் விழாக்களில் உரிமையுடையவர்கள் உண்டு. |
| 12 | கோபுர நுழைவுவாயிலருகே உள்ள தூண் | தமிழ் - கிரந்தம் | சக ஆண்டு 1384 ஆனி 28 வெள்ளிக்கிழமை (கி.பி. 1462 ஜூன்) | ஜடிலவர்மன் அரிகேசரி தேவன் - பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் | பரிவார தெய்வங்கள் நிவந்தம் | சிறு கோவில் கட்டுமானம்; சகஸ்ரலிங்கம், சக்தி பீடம், பரிவார தெய்வங்களில் சில பிரதிஷ்டை (ரிஷபதேவர்). ஊரின் 5-வது தெருவில் அரிகேசரி நங்கை (பிடாரி) கோவில் கட்டியது. |
| 13 | பொருந்தி நின்றருளிய பெருமாள் கோவில் தெற்கு சுவர் | தமிழ் - கிரந்தம் | சக ஆண்டு 1473 ஆடி 12 செவ்வாய் (பொ.யு. 1551 ஜூலை 14) | பராக்கிரம பாண்டியன் (சிவன் ஜடிலவர்மன் அல்லது அபிராம பராக்கிரமனின் மகன்) | நிவந்தம் | கோவில் திருவிழாச்சடங்குகள் நடத்த நிவந்தம். திருவாய்மொழி பெரியபெருமாள் பட்டதரி (கோட்டையூர்) |
| 14 | கோவில் நடுப்பகுதி - தற்போதைய முருகன் கோவில் | தமிழ் | ஜடிலவர்ம பாண்டியன் அல்லது திரிபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன் | நிவந்தம் | குளத்திற்கு நிவந்தம் அளித்தல். விஸ்வநாதம் பேரேரி வகர்தோட வனநாடு. | |
| 15 | கோவில் நடுப்பகுதி - தற்போதைய முருகன் கோவில் | தமிழ் | ஜடிலவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தின் பராந்தகன் பாண்டிய தேவன் | தென்வீர நாடு இலஞ்சியில் நிலம் கோவிலுக்கு என ஒப்பமிட்டவன் கடாரத்து சடையான் | ||
| 16 | கோவில் நடுப்பகுதி - தற்போதைய முருகன் கோவில் | தமிழ் | ஜடிலவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தின் பராந்தகன் பாண்டியன் | நிவந்தம் | காசிக்கு வாய்த்த நல்லூர் என்ற கிராமத்தை கோவிலுக்கு நிவந்தம் செய்தது. | |
| 17 | முருகன் கோவில் மேற்கு தெற்குவாசல் | தமிழ் | அரிகேசியின் 25-ம் ஆண்டு | அரிகேசரி பராக்கிரம பாண்டியன் | பராக்கிரம பாண்டிய நல்லூர், வீர பாண்டிய நல்லூர் ஆகிய கிராமங்கள் தேவதானம். இக்கல்வெட்டு கவிதை நடையில் அமைந்தது | |
| 18 | முருகன் கோவில் மேற்கு தெற்குவாசல் | தமிழ் | ஜடிலவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தின் பராந்தகன் பாண்டிய தேவன் | கட்டுமானம் | அரசனின் மிருகசேஸ்வர நட்சத்திர பிறந்த நாள் விழா நிவந்தம். தென்கரை காரைக்குறிச்சி, பிள்ளையார் குளம் கிராமங்களில் நிலம் விட்டுக்கொடுக்கப்பட்டது. | |
| 19 | முருகன் கோவில் மேற்கு தெற்குவாசல் | தமிழ் | ஜடிலவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தின் பராந்தகன் பாண்டிய தேவன் | கட்டுமானம் | பைம்பொழில் கிராமத்தில் நிலம் நிவந்தம். இது வடவரை நாட்டின் ஒரு பகுதி | |
| 20 | முருகன் கோவில் மேற்கு தெற்குவாசல் | தமிழ் | ஜடிலவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தின் பராந்தகன் பாண்டிய தேவன் | பசு நிவந்தம் | ||
| 21 | முருகன் கோவில் மேற்கு தெற்குவாசல் | தமிழ் | சக ஆண்டு1416 (பொ.யு. 1494) | ஜடிலவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தின் பராந்தகன் பாண்டிய தேவன் | நிவந்தம் | பிறந்த நாள் நிகழ்வு; நிலம் நிவந்தம்; தென்னறை நாடு குன்றக்குடியில் நிலம் |
| 22 | முருகன் கோவில் மேற்கு தெற்குசுவர் | தமிழ் | சக ஆண்டு 1419 | ஜடிலவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தின் பராந்தகன் பாண்டிய தேவன் | தென்காசி தோட்டம் ஒன்றில் வீடு நிவந்தம் கோவில் பூசகருக்கு வழங்கப்பட்டது. இந்த இடம் இலஞ்சிப் பக்கத்தில் உள்ளது. | |
| 23 | முருகன் கோவில் மேற்கு தெற்குசுவர் | தமிழ் | சக ஆண்டு 1384 (பொ.யு. 1462) | செண்பக சுந்தர பாண்டியன் அல்லது வீரபாண்டிய தேவன் | நிவந்தம் | வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம் என்ற கிராமத்தில் 24 பிராமணர்களுக்கு வேதம் ஓத, பஞ்சாங்கம் படித்துச் சொல்ல, புராண விரிவுரை நடத்த கட்டளையிட்டும் வீடு கொடுக்கப்பட்டது |
| 24 | முருகன் கோவில் மேற்கு தெற்குசுவர் | தமிழ் | சக ஆண்டு 1395 | அழகம்பெருமாள் அல்லது குலசேகர தேவன் | நிலதானம் | விஸ்வநாதர் கோவிலில் வேதம் ஓதினர். தென்காசிக்கு தென் வரி நாட்டு வீரபாண்டிய சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் இருந்தது. |
| 25 | முருகன் கோவில் மேற்கு தெற்குசுவர் | தமிழ் | ஜடிலவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தின் பராந்தகன் பாண்டிய தேவன் | நிவந்தம் | நெல், வயல், நிலம் கோவிலுக்கு நிவந்தம் அளிக்கப்பட்டது. வயல் கார், பாசனம் என்னும் இரு போகத்திலும் விளைந்தது. இந்நிலத்தைக் கவனித்த விவசாயிகள் குறுமறை நாடு, தென் வரி நாடு, வடவரை நாடு, குறுமலை நாடு பகுதிகளில் வாழ்ந்தனர். | |
| 26 | முருகன் கோவில் மேற்கு தெற்குசுவர் | தமிழ் | ஜடிலவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தின் பராந்தகன் பாண்டிய தேவன் | குன்னூர் பாகூர் ஆகிய குக்கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தானியங்களின் விலை; அவை கோவிலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் பற்றி. | ||
| 27 | முருகன் கோவில் மேற்கு தெற்குசுவர் | தமிழ் | ஜடிலவர்மன் | நிலம் | வீட்டு நிலம் 1 தோட்டம்; இந்த இடங்களில் வாழ்ந்தவர்கள் கோவிலைச் சார்ந்தவர்கள். ஐவர் தேவகர்மா; பிறர் பணியாளர். இவர்கள் கோவில் பிரசாதத்தை பங்கு வைத்து எடுத்துக் கொள்ளலாம் | |
| 28 | கோவில் வடப்புறம் | தமிழ் | கோஜடிலவர்மன் அல்லது பராக்கிரம பாண்டிய தேவன் | நிலம் நிவந்தம் | ||
| 29 | கோவில் வடப்புறம் | தமிழ் | ஆட்சியாண்டு 13 (ஜூலை 1455, 28) | கோஜடிலவர்மன் அல்லது வீரபாண்டிய தேவன் | அரசன் கலியுகராமன் திருநெல்வேலிப் பெருமாள்; இவன் காலத்தில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சக அரசனாக இருந்தான் | |
| 30 | கோவில் வடப்புறம் | தமிழ் | சக ஆண்டு 1421 (பொ.யு. 1499) | ஜடிலவர்மன் பராக்கிரம பாண்டிய தேவன் குலசேகர தேவன் | நில நிவந்தம் | இவன் இறந்த செய்தியும் கல்வெட்டில் உள்ளது. |
| 31 | தெற்கு சுவர் | தமிழ் | கோஜடவர்மன் குலசேகரதேவன் | இக்கோவிலைக் கட்டியவன் பராக்கிரம பாண்டியன் இவன் அரிகேசரி பராக்கிரமனின் தம்பி 1430 முதல் இவன் அண்ணனுக்கு உதவி செய்தான். கோபுர வேலையை அண்ணனுக்காக கட்டி முடித்தான். | ||
| 32 | தெற்கு சுவர் | தமிழ் | அரிகேசரி தேவன் பராக்கிரம பாண்டிய தேவர் | நில நிவந்தம் | அரசன் சக ஆண்டு 1381-ல் இறப்பு | |
| 33 | சுப்பிரமணியர் கோவில் | தமிழ் - கிரந்தம் | சக ஆண்டு 1459 (பொ.யு. 1537) | கோஜடிலவர்மன் ஸ்ரீவல்லப தேவன் | இறந்த கள மேதூத்த ஸ்ரீவல்லபன். இவன் 1533-ல் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். | |
| 34 | மகாமண்டப வடக்கு சுவர் | சமஸ்கிருதம் | வரகுண ஸ்ரீவல்லபன் குலசேகரன் | யாகம் செய்திருக்கிறான். யக்ஞஞோ விநாயகர் பிரதிஷ்டையில் நடந்த யாகம். அரசன் தீட்சகர் என்னும் பட்டத்தை வைத்துக் கொண்டான். |
வெளியீட்டாளர்கள்
திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி ஒன்றில் விஸ்வநாதர் கோவில் கல்வெட்டுகள் இடம்பெறவில்லை. இக்கோவில் கல்வெட்டுகளை முதலில் பொ.யு. 1895-ல் பிரதி எடுத்தனர். பின் 1908, 1909, 1912 ஆகிய ஆண்டுகளில் பிரதி செய்தனர். தென்காசி கோவில் கல்வெட்டை முதன்முதலில் பிரதி எடுத்து வி. ரங்காச்சாரி வெளியிட்டார். இவரது சென்னை ராஜதானி மாவட்டங்களில் உள்ள கல்வெட்டுகளின் சுருக்கம் தொகுப்பில் 52 கல்வெட்டுகள் 1895 - 1909-ம் ஆண்டுகளில் பிரதி செய்யப்பட்டவை இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டுகளையும் வேறு சில கல்வெட்டுகளையும் மூலத்துடன் ராபர்ட் சுவல் பதிப்பித்தார். இவரது தொகுப்பில் மூலங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழி விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 30 கல்வெட்டுகள் உள்ளன. திருவிதாங்கூர் தொல்லியல் வரிசையில் டி.ஏ. கோபிநாதராவ் தென்காசி கோவில்களின் எட்டு கல்வெட்டுகளைத் தொகுத்திருக்கிறார். இதில் கல்வெட்டின் மூலம், முகவுரை, பொருள் ஆகியன உள்ளன.
மேற்சொன்ன மூவர் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 52 கல்வெட்டுகளின் பிரதி கிடைத்திருக்கின்றன.
அமைவிடம்
தென்காசி கோவில் கல்வெட்டுகள் பெரும்பாலானவை கோபுர வாசல், முகப்பு மண்டபம், கருவறை, பின்புறச் சுவர் போன்ற இடங்களில் காணக்கிடைக்கின்றன.
மொழி
இங்குள்ள எல்லா கல்வெட்டுகளும் தமிழில் அமைந்தாலும் கிரந்த மொழியின் கலப்பு அதிகம் உள்ளது. மெய்கீர்த்திகள் சிலவும் உண்டு. இக்கல்வெட்டில் ஒன்றிரண்டைத் தவிர எல்லாம் சக வருஷத்தையே குறிப்பிடுகின்றன. மூன்று கல்வெட்டுகள் கலி ஆண்டையும், ஒரு கல்வெட்டு மலையாள ஆண்டையும் குறிப்பிடுகின்றன. சுழற்சி ஆண்டின் (பரிதாபி ஆண்டு) பெயர்களும் கல்வெட்டில் வருகின்றன. கல்வெட்டுகளில் மாதம், தேதி, நாள், திதி, நட்சத்திரம் , ராசி போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
காலம்
இக்கல்வெட்டுகள் எல்லாம் பொ.யு. 1445 - 1605-ம் ஆண்டுகளுக்கு உட்பட்டவை. 160 ஆண்டுகளில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டுகளில் பெரும்பாலும் பாண்டிய மன்னர்களின் பெயர்களே வருகின்றன.
உள்ளடக்கம்
இக்கல்வெட்டுகளில் கோவில் கட்டுமானம், கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தம், நிர்வாக முறை, அரசன் முடிசூட்டிய நிகழ்வு, தென்காசி ஊரில் பிராமணர் குடியேற்றம் போன்ற செய்திகள் வருகின்றன.
செய்யுள்
தென்காசி கோவில் கல்வெட்டுகளில் 38 தமிழ் செய்யுளில் உள்ளன. இவை எண்சீர் கழிநெடிலடி, ஆசிரிய விருத்தம், அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா, இரட்டைச் சீர் வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய யாப்பு வடிவங்களில் அமைந்தவை.
எடுத்துக்காட்டு
அன்பினுடன் சகாத்தமா யிரத்து முந்நூற்
றறுபத்தெட் டதன்மேல் வைகாசித் திங்கள்
மன்தியதி யீரைந்தில் பூறுவ பக்க
மருவுதெச மியில்வெள்ளி வாரந் தன்னில்
மிந்திகழுத் தரநாள் மீனத்தில் வாகைவே
லரிகே சரிபராக் கிரம மகிபன்
தெந்திசையிற் காசிநாதர்க் கோயில் காணச்
உசாத்துணை
- தென்காசி விஸ்வநாதர் ஆலயம், அ.கா. பெருமாள், சீ. கலையரசு, பரிசல் வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:08:05 IST