under review

தி.சோ. வேணுகோபாலன்

From Tamil Wiki
தி.சோ. வேணுகோபாலன்

தி.சோ. வேணுகோபாலன் (நவம்பர் 7, 1929 -) நவீனக் கவிஞர். எழுத்து இதழ் ஆரம்பித்த புதுக்கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தி.சோ. வேணுகோபாலன் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு வட்டத்தில் நவம்பர் 7, 1929-ல் பிறந்தார். திருவையாறில் உயர்நிலைக்கல்வி படித்தார். சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். ராஜஸ்தானில் உள்ள பிலானியில் மெக்கானிக்கல் என்ஜியரிங் படித்தார்.

மைசூரில் உள்ள மணிப்பால் நகரத்தில் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கோடை வயல் (எழுத்து வெளியீடு, 1965)

தி.சோ. வேணுகோபாலன் எழுத்து இதழில் 1959 முதல் கவிதைகள் எழுதினார். எழுத்து, ஞானரதம் ஆகிய இதழ்களில் இவருடைய கவிதைகள் வெளிவந்தன. எழுத்து இதழ் ஆரம்பித்த புதுக்கவிதை இயக்கத்தில் எழுதியவர்களில் ஒருவர். 'கோடை வயல்' என்ற பெயரில் இவரது கவிதைகள் எழுத்து வெளியீடாக ஆகஸ்ட் 1965ஆம் ஆண்டு வெளிவந்தது.

2024-ல் தி.சோ. வேணுகோபாலன் கவிதைகள் விருட்சம் பதிப்பகம் வெளியீடாக வந்தது.

மதிப்பீடு

"பிச்சமூர்த்தியை முன்மாதிரியாகக்கொண்டு எழுதி, ஓரளவுக்கு வெற்றிகண்டவர்கள் பலர். அவர்களில் தி. சோ. வேணுகோபாலன் ஒருவர்" என க.நா.சுப்ரமணியம் மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • கோடை வயல் (எழுத்து பிரசுரம், 1965)
  • மீட்சி விண்ணப்பம் (க்ரியா வெளியீடு, 1977)
  • தி.சோ. வேணுகோபாலன் கவிதைகள் (விருட்சம் பதிப்பகம், 2024)

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jul-2025, 10:27:58 IST