under review

திருவானைக்கோவில் துரைசாமி பிள்ளை

From Tamil Wiki

திருவானைக்கோவில் துரைசாமி பிள்ளை (1851-1922) ஒரு நாதஸ்வரக் கலைஞர்

பிறப்பு, இளமை

துரைசாமி பிள்ளை, நாதஸ்வரக் கலைஞர் நாராயணசாமி பிள்ளை - அகிலாண்டத்தம்மாள் இணையருக்கு 1851-ம் ஆண்டு பிறந்தார்.

தனிவாழ்க்கை

திருக்காட்டுப்பள்ளி நம்பியப்பப்பிள்ளையின் மகள் சுப்பம்மாளை மணந்தார். இவர்களுக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள்:

  1. ராஜம் பிள்ளை (நாதஸ்வரம்)
  2. வேலுச்சாமிப் பிள்ளை (நாதஸ்வரம்)
  3. செல்லம்மாள் (கணவர்: திருக்காட்டுப்பள்ளி கதிர்வேல் பிள்ளை)
  4. சிங்காரம் பிள்ளை (தவில்)
  5. கோபால பிள்ளை (நாதஸ்வரம்)
  6. ராமு நட்டுவனார் (நாதஸ்வரமும் வாசிப்பார்)

’திருவானைக்கோவில் தம்பி’ என்றழைக்கப்படும் ரத்தினம் பிள்ளை, துரைசாமி பிள்ளையின் பேரன் (வேலுச்சாமிப் பிள்ளையின் மகன்)

இசைப்பணி

திருவானைக்கோவில் துரைசாமி பிள்ளை மிகச் சிறந்த நாதஸ்வரக் கலைஞர் என திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்களால் பாராட்டப்பட்டவர்.

மறைவு

திருவானைக்கோவில் துரைசாமி பிள்ளை 1922-ம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 04:40:46 IST