under review

திருப்பயற்றுநாதர் கோயில்

From Tamil Wiki
திருப்பயற்றுநாதர் கோயில்
திருப்பயற்றுநாதர் கோயில் மூலவர்

திருப்பயற்றுநாதர் கோயில் திருப்பயத்தூரில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற தலம். இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

திருப்பயற்றுநாதர் கோயிலின் வரலாற்றுப் பெயர் திருப்பயற்றூர். திருப்பயத்தான்குடி என்று அழைக்கப்பட்டது. திருப்பயற்றுநாதர் கோயில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு திருவாரூர் செல்லும் பாதையில் பதினொன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கங்கலாஞ்சேரி - நாகூர் சாலையில் இருந்து மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். மேலப்புதனூரை அடைந்து பின்னர் திருமருகல் சாலையில் சென்று இக்கோயிலை அடையலாம். இக்கோயில் திருமருகலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கல்வெட்டு

திருப்பயற்றுநாதர் கோயிலில் சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள் உள்ளன.

திருப்பயற்றுநாதர் கோயிலில் பஞ்சநாதவாணன் என்ற மனிதனின் கதையை விவரிக்கும் கல்வெட்டு ஒன்று உள்ளது. கண் நோயால் அவதிப்பட்டு வந்த பஞ்சநாதவாணன் குணமாக இறைவனிடம் வேண்டினார். சிவன் அவரது நோய்களை குணப்படுத்தினார். பஞ்சநாதவாணனின் குடும்பத்தினர் இந்த கோவிலுக்கு சிறிது நிலத்தை தானமாக வழங்கினர்.

தொன்மம்

  • பைரவ மகரிஷி இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
  • தீவிர சிவபக்தரான ஒரு வியாபாரி அருகில் உள்ள நாகப்பட்டினத்தில் கடல்வழி வியாபாரம் செய்தார். நாகப்பட்டினத்துக்கு மிளகு வியாபாரம் செய்யச் சென்றபோது வழியில் இருந்த சோதனைச் சாவடியில் மிளகுக்கு வரி விதிக்கப்படும் என்பதால் வரி இல்லாத பருப்பு வகைகளாக மாற்றும்படி சிவபெருமானிடம் வேண்டினார். இறைவன் அவன் விருப்பத்தை நிறைவேற்றினான். இக்கோயிலைப் புதுப்பிப்பதில் வணிகர் தனது லாபத்தைச் செலவு செய்ததாக நம்பப்படுகிறது. எனவே இங்குள்ள இறைவன் பயற்றுநாதர் என்று அழைக்கப்பட்டார். இத்தலம் பயற்றூர் எனப் பெயர் பெற்றது.
திருப்பயற்றுநாதர் கோயில் சிலந்தி மரம்

கோவில் பற்றி

  • மூலவர்: பயத்ரநாதர், பயத்ரீஸ்வரர், முக்தபுரீஸ்வரர்
  • அம்பாள்: காவியங்கண்ணி அம்மை, நேத்ராம்பிகை
  • தீர்த்தம்: தேவிதீர்த்தம், கருணாதீர்த்தம்
  • ஸ்தல விருக்ஷம்: சிலந்தி மரம்
  • பதிகம்: திருநாவுக்கரசர் வழங்கிய பாடல்
  • இருநூற்று எழுபத்தியாறாவது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று
  • எழுபத்தி எட்டாவது சிவஸ்தலம்.
  • இக்கோயிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்
  • கடைசியாக கும்பாபிஷேகம் ஜுன் 6, 2011 அன்று நடைபெற்றது

கோவில் அமைப்பு

இக்கோயிலின் முன் மண்டபம் வவ்வால் நெற்றிப் பொட்டு போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை அரை வட்ட தொட்டி வடிவில் உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியின் சிலை மட்டும் உள்ளது. இக்கோயிலின் ஸ்தல விருக்ஷம் சிலந்தி மரம். இந்த மரத்தின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்தியை ஒத்துள்ளது. இங்கு துர்க்கை அம்மன் சன்னதி இல்லை ஆனால் அதன் இடத்தில் வீரமாகாளி அம்மன் சன்னதி உள்ளது. கிழக்கு நோக்கிய இக்கோயிலுக்கு ஒற்றை நடைபாதை உள்ளது மற்றும் அதன் பிரதான கோபுரத்திற்கு அடுக்குகள் இல்லை. கோபுரத்தின் இடத்தில், 'பஞ்சமூர்த்தி' களை (சிவன், பார்வதி தேவி, விநாயகர் முருகன் மற்றும் அங்காரகன்) சித்தரிக்கும் அழகிய சிற்பங்கள் உள்ளன. இந்தக் கோயிலில் கொடிமரம் கிடையாது.

திருப்பயற்றுநாதர் கோயில் சிற்பங்கள்

சிற்பங்கள்

சிவன், பார்வதி தேவி சன்னதிகள் தவிர, சித்தி விநாயகர், முருகன், துணைவியருடன் மகாலட்சுமி, பைரவ மகரிஷி, மகாகணபதி, தண்டபாணி, விசாலாட்சியுடன் கூடிய விஸ்வநாதர், பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர், வீரமகாளி ஆகியோரின் சன்னதிகளும், வீரமகாமாளிகள் சிற்பங்கள் மண்டபத்திலும் தாழ்வாரங்களிலும் உள்ளன. முருகன் முன் மயில் சிலை உள்ளது. நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன.

சிறப்புகள்

  • கண் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, காவியங்கண்ணி அம்மனை வழிபடும் நம்பிக்கை உள்ளது
  • பக்தர்கள் தீய சக்திகளை விரட்ட வீரமாகாளி அம்மனை வழிபடும் நம்பிக்கை உள்ளது.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 7-12
  • மாலை 4-8:30

விழாக்கள்

  • வைகாசியில் விசாகம் நட்சத்திர நாளில் பிரம்மோத்ஸவம் கொண்டாடப்படும்
  • சித்திரையில் பௌர்ணமி நாள்
  • ஆடியில் ஆடி பூரம்
  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி.
  • புரட்டாசியில் நவராத்திரி
  • ஐப்பசியில் ஸ்கந்த ஷஷ்டி, அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் திரு கார்த்திகை
  • தையில் மகர சங்கராந்தி
  • மாசியில் சிவராத்திரி
  • பிரதோஷம் அனுசரிக்கப்படும்.

உசாத்துணை


✅Finalised Page