தியானம்
தியானம் திருமூலர் குறிப்பிடும் அஷ்ட யோகங்களில் ஒன்று. எட்டு வகையான யோகங்கள் மூலம் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள் ஆகின்றனர். இதில் தியானம் ஏழாவது படிநிலையில் உள்ளது.
தியானம்
உணர்வற்று, உடலற்று, சிந்தனையற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று, பிரம்மத்திடம் மனமும் புத்தியும் லயித்து போகவேண்டும். இடையறாது சிவ சிந்தனையோடு இருக்கவேண்டும். அதுவே தியானம் என திருமூலர் குறிப்பிடுகிறார். ஒரு பொருள், ஒரு பெயர் என ஏதாவது ஒன்றை தியானிக்கலாம்.
- திருமந்திரம்
வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போக மேவல்;
உருவாய சத்தி பரத்தியானம்; உன்னும்
குரு ஆர் சிவத்தியானம் யோகத்தின் கூறே-
விளக்கம்: பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று, புருடன் ஒன்று ஆகிய பத்து இச்சைகளிலும் இருந்து மனமானது விடுபட்டு தியானத்தில் நிலைக்க வேண்டும். பொறி புலன்கள் நீங்கி இருப்பது தியானம். உச்சியில் ஒளி வடிவாக இறைவனை தியானிப்பின் அது சக்தி தியானமாகும். இறைவனை உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத்தியானமாகும். இவை இரண்டும் யோகத்தின் இரு கூறுகளே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2025, 18:39:52 IST