தர்மாம்பாள்(நாவல்)
- தர்மாம்பாள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தர்மாம்பாள் (பெயர் பட்டியல்)
தர்மாம்பாள் (1916) தமிழில் வெளிவந்த தொடக்க கால நாவல்களில் ஒன்று. பண்டித வி.கே.சுப்ரமணிய சாஸ்திரியார் இந்நவலை எழுதினார். தமிழ் நாவல் தோன்றிய காலகட்டத்தில் நவீன காலகட்டம் பற்றிய ஒழுக்கவியல் பதற்றம் ஏற்பட்டது. மரபான ஒழுக்கநெறிகளை வலியுறுத்த பல நாவல்கள் எழுதப்பட்டன. அவற்றிலொன்று இந்நாவல்
எழுத்து, பிரசுரம்
இந்நாவல் 1916-ல் வெளிவந்தது.பண்டித வி.கே.சுப்ரமணிய சாஸ்திரியார் இரண்டு பாகங்களாக எழுதினார். பின்னர் அவை ஒரே நூலாக ஆக்கப்பட்டன.
உள்ளடக்கம்
தர்மாம்பாள் நாவல் குளித்தலை,சென்னை ஈரோடு போன்ற ஊர்கள் களங்களாக உள்ளன. இந்நாவலில் பிராமணக் குடும்பங்களில் பொறாமை வஞ்சம் போன்ற உணர்வுகள் உருவாக்கும் அழிவு விவரிக்கப்படுகிறது. விபத்தான சகாயம்,துர்ஜன காரியம், அஸ்தி விஜயம், இஷ்ட ஜன சமாகமம், உபசம்ஹாரம் போன்ற துணைத்தலைப்புக்களை ஆசிரியர் அளித்திருக்கிறார்
உசாத்துணை
- தமிழ்நாவல் சிட்டி-சிவபாதசுந்தரம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:04 IST