under review

தமிழ்மாது

From Tamil Wiki

தமிழ்மாது (1905) பெண்கள் மாத இதழ். கோ. ஸ்வப்னேஸ்வரி இதன் ஆசிரியர்.

வெளியீடு

தமிழ்மாது 1905 முதல் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து வெளிவந்த பெண்களுக்கான இதழ். கோ. ஸ்வப்னேஸ்வரி இதன் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார்.

உள்ளடக்கம்

தமிழ்மாது இதழில் பெண்கள் குடும்பத்தில் திறமையாக இயங்குவதற்காகவும், நல்லொழுக்கத்துடன் இருப்பதற்கும் தேவையான பயிற்சிகள், சார்ந்த தகவல்கள், கட்டுரைகளும் இடம்பெற்றன.

இலக்கிய இடம்

தமிழ்மாது பெண்களுக்கான தகவல்கள், அறிவுரைகள், ஒழுக்கம் மற்றும் மரபார்ந்தவைகளைப் பேசும் இதழாக அமைந்தது.

உசாத்துணை


✅Finalised Page