under review

தமிழ்நேயம் (இதழ்)

From Tamil Wiki
தமிழ்நேயம்

தமிழ்நேயம் (1998-2012) ஞானி நடத்திய சிற்றிதழ். கோவையில் இருந்து தமிழியக்க ஆய்வுகளுக்காகவும், மார்க்ஸியத்தையும் தமிழியக்கத்தையும் இணைப்பதற்காகவும் ஞானி இவ்விதழை நடத்தினார்.

வரலாறு

ஞானி நடத்திய நிகழ் சிற்றிதழ் 1996-ல் நின்றது. ஞானியின் பார்வையில் பெரிய மாற்றம் உருவானது. அவர் மார்க்சிய நோக்கை தமிழ்த்தேசிய சிந்தனைகளை நோக்கி விரிவாக்கம் செய்தார். தேசிய இனங்களின் விடுதலை வழியாகவே மார்க்சிய விடுதலை சாத்தியம் என்னும் எண்ணம் உருவாகியது. தமிழ்த்தேசிய சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் பொருட்டு தமிழ்நேயம் இதழை 1998-ல் தொடங்கினார். விட்டுவிட்டு 28 இதழ்கள் வெளிவந்த தமிழ்நேயம் ஞானி நோயுறுவதுவரை நடைபெற்றது.

பங்களிப்பு

கோவையை மையமாகக் கொண்ட தமிழ்த்தேசிய சிந்தனையாளர்களின் இதழாக தமிழ்நேயம் விளங்கியது. தமிழ்ப்பண்பாடு, தமிழ்ப்பொருளியல், தமிழ் அடையாளம் ஆகியவற்றை பேணும் நோக்கை கொண்டிருந்தது. இலக்கிய விமர்சனங்களும் வெளியிடப்பட்டன. ஜெயமோகனின் கொற்றவை நாவலுக்காகச் சிறப்பிதழ் ஒன்று வெளியிடப்பட்டது

உசாத்துணை


✅Finalised Page