under review

தந்துநிறை

From Tamil Wiki

தந்துநிறை வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. வெட்சி மறவர் ஊருக்கு முன்னால் உள்ள வெளியிடத்தில் காத்திருந்த ஊரார் காணும்படி கைப்பற்றிய ஆநிரையைக் கொண்டு நிறுத்துவதைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஊருக்கு முன்னால் உள்ள வெளியிடத்தில் காத்திருந்த ஊரார் காணும்படி கைப்பற்றிய ஆநிரையைத் தந்து(கொண்டு) நிறுத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வார் வலந்த துடி விம்ம
ஊர் புகல நிரை உய்ந்தன்று(கொளு 1.16)

வெண்பா

தண்டா விருப்பினள் தன்னைத் தலைமலைந்த
வண்டார் கமழ்கண்ணி வாழ்க என்று - கண்டாள்
அணிநிரை வால் முறுவல் அம்மா எயிற்றி
மணிநிரை மல்கிய மன்று (13)

பொருள்:அழகிய ஒளிவிடும் பல்வரிசையையும், பெருமையினையும் உடையவளான எயிற்றி, தணியாத விருப்பத்துடன் தன் தலைவனது தலையில் சூடிய வண்டு நிறைந்த மணங்கமழும் மாலை வாழ்கவென வாழ்த்தியவளாக, மணிகள் பூட்டப்பெற்ற ஆநிரைகள் மிகுதியாக நின்றிருந்த மன்றத்தைச் சென்று கண்டாள்!

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Mar-2025, 10:02:16 IST