under review

தசாங்கத்தயல்

From Tamil Wiki

தசாங்கத்தயல் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தசாங்கம் பத்து வகை நறுமணப்பொருட்களைக் குறிக்கும். பத்து அங்கங்கள் என்றும் பொருள்படும். அரசனின் பத்துவகை உரிமைப் பொருள்களைப் பற்றிப் புகழ்ந்து ஆசிரிய விருத்தப் பாவால் பாடுவது தசாங்கத்தயல்.[1]

மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசனின் அங்கங்கள். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறும், பிறவும் 10- என்றும், 14- என்றும் எண்ணப்படும் அயல் அங்கங்கள்.

தசாங்க இலக்கிய வகையில் மாணிக்கவாசகர் இயற்றிய திருத்தசாங்கம் முதல் படைப்பு. நவீன இலக்கியத்தில் பாரதியின் 'பாரத தேவியின் திருத்தசாங்கம்' பாரத தேவியின் 10 அங்கங்களைப் பாடுகிறது.

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page