under review

தங்கமுத்துப் புலவர்

From Tamil Wiki

தங்கமுத்துப் புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். தனிப்பாடல்கள் பல பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கொங்கு நாடு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிறந்தார். தங்கமுத்துக் கவிராயர் என்றும் அழைப்பர். சிவ பக்தர்.

தொன்மம்

தங்கமுத்துப் புலவர் பசியோடு இருக்கும்போது கரும்பெரிச்சிக் கவுண்டன் அவனுடைய காட்டைத் திறக்காததால் "எறும்பரித்துப் போக சிவா" என்று சாபமிட்டதால் அந்தக்காடு "சாபக்காடு" என்றழைக்கப்பட்டது என்பர்.

நொய்யல் ஆற்றை நோக்கி "பாழுங்கிடங்கே பரந்தோடும் நொய்யலே ஓடுங்கரை பார்த்துணராயோ" என்று பாடியதால் நொய்யலில் வெள்ளம் கரை புரண்டோடியது என்ற தொன்மக்கதை உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

சிற்றூர்கள் பலவற்றுக்குப் பயணம் செய்து பாடல்கள் பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார். நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

உசாத்துணை


✅Finalised Page