under review

டி. முக்தா

From Tamil Wiki
டி. முக்தா
டி. முக்தா

டி. முக்தா (தஞ்சாவூர் முக்தா) (1914 - மார்ச் 11, 2007) கர்நாடக சங்கீதப்பாடகர். தனது மூத்த சகோதரி டி. பிருந்தாவுடன் இணைந்து இரட்டையர் பாடகிகளில் ஒருவராகப் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

டி. முக்தா வீணை தனம்மாளின் மூத்த புதல்வி காமாட்சிக்கு மகளாக 1914-ல் பிறந்தார். சௌந்தரராஜ ஐயங்கார் இவரின் தந்தை. இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாய் காமாட்சி வாய்ப்பாட்டுக் கலைஞர். காஞ்சிபுரம் பர்வதம்மாள் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தாய் காமாட்சியிடம் தொடக்ககாலத்தில் வீணை தனம்மாள் பாணி இசை பயின்றார். வீணை தனம்மாளிடமும் இசை பயின்றார். காஞ்சிபுரம் நாயினார் பிள்ளையிடம் இசை பயின்றார். தனது அத்தை லட்சுமிரத்தினத்திடமும் கற்றுக்கொண்டார்.

டி. பிருந்தா & டி. முக்தா

இசை வாழ்க்கை

டி. முக்தா கர்நாடக இசையில் வீணை தனம்மாள் பள்ளியைச் சேர்ந்தவர். தனம்மாள் பள்ளி நிதானமான, கவர்ச்சியான அசைவுகளுக்கு பெயர் பெற்ற கர்நாடக இசையின் பாணி. முக்தா கர்நாடக இசையில் முதல் பெண் இரட்டையர் பாடகிகளில் ஒருவர். எட்டு வயதில் தன் சகோதரி டி. பிருந்தாவுடன் மேடையேற்றம் செய்தார். தன் இசை வாழ்க்கையின் முதல் பாதியில் டி. பிருந்தாவுடன் கச்சேரிகள் செய்தார். அவரைப் பிரிந்தபின் முப்பத்தி நான்கு ஆண்டுகள் தனியாக கச்சேரிகள் செய்தார். முக்தாவின் கடைசி நிகழ்ச்சி 2003-ல் கிளீவ்லேண்டில் நடைபெற்றது. முக்தா பல இசைக்கலைஞர்களுக்கு ஆசிரியராக இருந்தார்

மாணவர்கள்
  • வேதவல்லி
  • ரீத்தா ராஜன்
  • ரமா ரவி
  • எஸ். சௌமியா

விருது

  • 1972-ல் முக்தா சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார்

மறைவு

டி. முக்தா மார்ச் 11, 2007-ல் காலமானார்.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page