under review

டி. பாஸ்கரன்

From Tamil Wiki
டி. பாஸ்கரன்

டி. பாஸ்கரன் ( பிறப்பு: மே 11, 1995) சித்த மருத்துவர். நாடி பார்த்து நோய் அறியும் முறையைக் கடைப்பிடிப்பவர். சித்தமருத்துவத்தை விளக்கி கட்டுரைகளை எழுதிவருகிறார்.

பிறப்பு, கல்வி

டி.பாஸ்கரன் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் மே 11, 1995 அன்று பிறந்தார். பெற்றோர்பி. டம்பாச்சாரி (எலும்பு முறிவு மருத்துவர்) டி.ராஜேஸ்வரி. ஆரம்பபள்ளி ஆசிரியை.

டி.பாஸ்கரன் தொடக்கக் கல்வியை சத்துவாச்சாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், மேல்நிலைபள்ளியை சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார். சித்தமருத்துவத்தில் இளங்கலைப்படிப்பை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வேலுமயிலு சித்த மருத்தவக் கல்லுரியில் பயின்றார்.

தனிவாழ்க்கை

டி.பாஸ்கரன் ஜெயப்பிரித்தாவை செப்டம்பர் 16, 2019-ல் மணந்தார். மகன் சஷ்விக்.

தமிழகமெங்கும் நோயாளிகளைச் சந்தித்து சித்த மருத்துவம் பார்த்துவருகிறார். சித்தாவரம் அறக்கட்டளை நிறுவனர். இம்பகாப்ஸ் இயக்குனராகவும் பணியாற்றுகிறார்

மருத்துவப்பணி

மருத்துவக் கட்டுரைகள்

டி.பாஸ்கரனின் முதல் கட்டுரை தினத்தந்தி நான்காம் பக்கத்தில் 'ஆரோக்கியத்துக்கு உதவும் ஆலமரம்' என்ற தலைப்பில் 2019-ல் வெளியானது .அதைத் தொடர்ந்து தினகரன், தமிழ் இந்து திசை, குமுதம், குமுதம் ஹெல்த், தினமலர் உள்ளிட்ட இதழ்களில் 150-க்கும் மேற்பட் டகட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரின் இருபது கட்டுரைகள் அடங்கிய முதல்நூல் 'சித்தாவரம்' என்ற பெயரில் தேநீர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

விருதுகள்

  • வேலூர் விஐடி பல்கலைக்கழகம் வழங்கிய சமூக சேவகர் விருது
  • திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வழங்கிய சுதந்திர தின பாராட்டுவிருது

மதிப்பீடு

டி.பாஸ்கரன் வெளியிட்ட சித்தாவரம் நூல் குறித்து எழுத்தாளர் பாவண்ணன் "மருத்துவம் சார்ந்த நல்ல ஆழமான ஞானமும் பட்டறிவும் கொண்ட பாஸ்கரன் நோயின்றி வாழும் வழிமுறைகளையும் நோய்களைப் புரிந்துகொண்டு அவற்றின் பாதிப்பிலிருந்து மீண்டுவரும் வழிமுறைகளையும் நோய்வருமுன் காத்துக் கொள்ளும் விதமாக வீட்டில் கடைபிடிக்கவேண்டிய உணவு, உறக்கம், உடற்பயிற்சி சார்ந்த சில முக்கியமானப் பழக்கவழக்கங்களையும் முன்வைத்து அவ்வப்போது நாளேடுகளிலும் வாரஇதழ்களிலும் அவர் தொடர்ச்சியாக எழுதிய இருபது கட்டுரைகளைத் தொகுத்து இப்போது சித்தாவரம் என்னும் தலைப்பில் நூலாக்கியிருக்கிறார். வாசகர்களுக்கு இந்நூல் அரியதொரு வழிகாட்டி என்றே சொல்லவேண்டும். ஒரு புனைவுநூலைப் படிக்கும் சுவாரசியத்தோடு அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு கட்டுரையையும் நம்மால் படிக்க முடிகிறது" என்று குறிப்பிடுகிறார்.

நூல்கள்

  • சித்தாவரம் 2024 (மருத்துவக் கட்டுரைகள்)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Aug-2025, 19:13:37 IST