under review

டி.ஏ. பாரி

From Tamil Wiki
பாரி.jpeg

டி.ஏ. பாரி (பிறப்பு: ஜூன் 01, 1990) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். கதைகள், கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

மனைவி ரஞ்சினியுடன் பாரி

டி.ஏ. பாரி ஜூன் 01, 1990 அன்று சிதம்பரம் அருகே அம்பாபுரம் கிராமத்தில் அன்பழகன், தேன்மொழி தம்பதியருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு அண்ணன் இளங்கோவன். பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி கற்றார். பொறியியல் கல்வியை பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பயின்றார்.

தனி வாழ்க்கை

பாரி பிப்ரவரி 15, 2021 அன்று ரஞ்சினி அரசியை மணந்தார். ரஞ்சினி ஆங்கில ஆசிரியை. தற்போது பாரி மனைவியுடன் ஈரோட்டில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

டி.ஏ. பாரி கல்லூர் நான்காம் ஆண்டு படிக்கும் போது எழுத்தாளர் மணவாளனால் இலக்கிய அறிமுகம் பெற்றார். பாரியின் முதல் மொழிபெயர்ப்பு சிறுகதை ஐசக் பாஷவிஸ் சிங்கரின் 'முட்டாள் கிம்பெல்' ஜெயமோகன்.இன் தளத்தில் வெளிவந்தது. சிங்கரின் சிறுகதைகள் மீதுள்ள ஈடுபாட்டால் தொடர்ந்து அவரது சிறுகதைகளை மொழிபெயர்த்து வருகிறார். அபுனைவு, புனைவு இரண்டு தளங்களிலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். 20 க்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு கவிதைகள்.இன், குருகு, அகழ் போன்ற இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.

வெளி இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2025, 00:37:47 IST