under review

டி.எம்.காளியப்பா

From Tamil Wiki
டி.எம்.காளியப்பா

டி.எம்.காளியப்பா (பிறப்பு:பிப்ரவரி 28,1930) கொங்கு வரலாற்று ஆய்வாளர், இந்திய தேசியக் காங்கிரஸ் பணியாளர். திருவாணன் என்னும் புனைபெயரில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் சரவணத்தோட்டம் முத்துசாமிக் கவுண்டர் காளியம்மாள் இணையருக்கு பிப்ரவரி 28, 1930-ல் பிறந்தார். பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

1954-ல் இந்திய அரசின் செய்தித்துறை செய்தித் தொகுப்பாளராகப் பதவி ஏற்றார். செய்தி சுற்றுலாத்துறை இணை இயக்குநராக பிப்ரவரி 28, 1988-ல் ஓய்வுபெற்றார். காளியப்பா சின்னத்தாய் அம்மாளை மணந்தார். சக்திதேவி, விக்ரமன், திருமகள் என மூன்று வாரிசுகள்.

அரசியல்

1942 முதல் 1954 வரை இந்திய தேசியக் காங்கிரஸ் ஊழியராக இருந்தார்

இலக்கியம்

காளியப்பா திருவாணன் என்னும் பெயரில் நாவல்களும், கதைகளும், வரலாற்றாய்வுக் கட்டுரைகளும் எழுதினார்.

நூல்கள்

நாவல்கள்
  • கல்யாணபுரக்கன்னி
  • புலிகேசியின் காதல்
  • திருமலைநாயக்கன் இட்ட தீ
  • குலோத்துங்கன் காதலி
கதைகள்
  • காந்தக்கோட்டை
  • கவிதையில் பூத்த கதைகள்
  • இந்திய நாடோடிக்கதைகள்
  • உலக நாடோடிக்கதைகள்
  • இந்திய ராணிகள்
  • மங்கல்யம் தந்த மகாராசி
கட்டுரைகள்
  • அரசியல் ஊற்றுகள்
  • புகழேந்திர நாவலர்கள்
  • மேடையில் பேசுவது எப்படி?
  • கூட்டத்தில் பேசுவது எப்படி?
  • பேச்சுக்கலை
  • குடும்பத்தில் பெண்ணின் கடமை
  • குடும்பத்தில் ஆணின் கடமை
  • தலைவராவது எப்படி?
  • பெண்கள் பெருமை
  • ராஜதந்திரக் கலை
  • இருபதாம் நூற்றாண்டு மேதைகள்
  • வியாபாரம் செய்வது எப்படி?
  • வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி?
வரலாறு
  • கொங்கு வேளாளர் வரலாறு (இணையநூலகம்)
  • கோவை நகர வரலாறு
  • கொங்குத்தமிழ்
  • காணாமல்போன தமிழ் இனங்கள்
  • பத்துதலை ராவணன்
  • கொங்குநாட்டில் சுதந்திரப்போர்
  • சர்வாதிகாரி காமராஜ்
மொழிபெயர்ப்பு
  • வாழ்வும் மதமும் - டால்ஸ்டாய்
  • சீனாவும் ருஷ்யாவும்- ஹென்றி வெய்

உசாத்துணை


✅Finalised Page