under review

ஜெ. ராமன்

From Tamil Wiki
ஜெ. ராமன்

ஜெ. ராமன் (பிறப்பு: 1965) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்(ஆசான்). நாடகங்கள், தெருக்கூத்துகள் ஆகியவை அரங்காற்றுகை செய்துள்ளார். கல்லூரிகளிலும் தெருக்கூத்து கற்றுக் கொடுக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெ. ராமன் காஞ்சிபுரம் மாவட்டம் பால்செட்டி சத்திரத்தில் ஜெகந்நாத நாயக்கருக்கு மகனாக 1965-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். தெருக்கூத்து இல்லாத சமயங்களில் விவசாயம் பார்ப்பார்.

கலை வாழ்க்கை

ஜெ. ராமன் இரண்டாம் தலைமுறை தெருக்கூத்துக் கலைஞர். தந்தை எம். ஜெகந்நாத நாயக்கர் கூத்துக் கலைஞர். ஸ்ரீ பவானி அம்மன் நாடக மன்றம், வதியூர் லட்சுமி அம்மன் நாடக மன்றம் ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, அரக்க்கோணம், சென்னை, வந்தவாசி ஆகிய இடங்களில் கூத்து நடத்தினார்.

மாணவர்கள்

ஜெ. ராமன் தெருக்கூத்திற்கு வந்த இரண்டு வருடங்களிலேயே வாத்தியார் ஆனார். மதுரையில் கல்லூரி மாணவர்களுக்கு பதினொரு நாட்களில் சுந்தரி திருக்கல்யாணம், அரவான் களபலி ஆகிய கூத்துக்களை கற்றுக் கொடுத்தார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்துக்கள்
  • கர்ணமோட்சம்
  • சயிந்தவ பங்கம்
  • சுந்தரி திருக்கல்யாணம்
நாடகங்கள்
  • தாய்ப்பாசம்
  • கசங்கிய ரோஜா
  • யார் அந்த வாலிபர்கள்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 07:56:34 IST