under review

ஜெஃப்ரி ப்ராக்

From Tamil Wiki
ஜெஃப்ரி ஃப்ரோக்

ஜெஃப்ரி ப்ராக் (Geoffrey Brock) (பிறப்பு: அக்டோபர் 19, 1964) ஆங்கிலத்தில் எழுதும் கவிஞர், எழுத்தாளர். ஏராளமான கவிதை, உரைநடை மற்றும் காமிக்ஸ் தொகுதிகளை மொழிபெயர்த்தவர். படைப்பெழுத்து மற்றும் இலக்கிய மொழியாக்கம் சார்ந்த துறை ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெஃப்ரி ப்ராக் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அட்லாண்டா மாநிலத்தில் கவிஞர்கள் வான் கே. ப்ராக் (Van K. Brock) மற்றும் ஃப்ரான்செஸ் ப்ராக் (Frances Brock) இணையருக்கு அக்டோபர் 19, 1964-ல் பிறந்தார். டாலஸ் மற்றும் ஃப்ளோரிடாவில் வளர்ந்தார். ஃப்ளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கலைத்துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார். யுனிவர்சிட்டி ஆஃப் ஃப்ளோரிடாவில் கலைத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்(University of Pennsylvania) ஒப்பீட்டு இலக்கியத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜெஃப்ரி ப்ராக் எழுத்தாளரான பத்மா விஸ்வநாதனை மணந்தார்.

அர்கென்ஸா பல்கலைக்கழகத்தில் படைப்பெழுத்து மற்றும் இலக்கிய மொழியாக்கம் சார்ந்த துறையில் பேராசிரியராக உள்ளார். அர்கென்ஸா மாநிலத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஜெஃப்ரி ப்ராக் நான்கு கவிதை நூல்களை எழுதியவர். எஃப்எஸ்ஜி பதிப்பக வெளியீடான இருபதாம் நூற்றாண்டு இத்தாலியக் கவிதை தொகுப்பின்(The FSG Book of Twentieth-Century Italian Poetry) தொகுப்பாளர் மற்றும் ஆசிரியர். பல கவிதை, உரைநடை மற்றும் காமிக்ஸ் தொகுதிகளை மொழிபெயர்த்தவர். இவரின் படைப்புகள் தி நியூயார்க்கர்(The Newyorker), பொயட்ரி மேகஜின்(Poetry Magazine), தி நியூ ரிபப்லிக், பாரிஸ் ரிவ்யூ, யேல் ரிவ்யூ, தி நியூயார்க் டைம்ஸ், பெஸ்ட் அமெரிக்கன் பொயட்ரி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

விருதுகள்

  • குகன்ஹைய்ம் அறக்கட்டளை (Guggenheim Foundation) ஆய்வுநல்கை
  • அமெரிக்க கவிஞர் கழகத்தின் Raiziss/de Palchi Translation Book Award
  • தேசிய கலைகளுக்கான அறக்கட்டளை விருதுகள் பெற்றவர்
  • கியூசெப் உங்கரெட்டியின்(Giuseppe Ungaretti) அலெக்ரியா(Allegria) நூலின் மொழிபெயர்ப்புக்காக 2021-ம் ஆண்டு கவிதைக்கான தேசிய கவிதை மொழிபெயர்ப்பு விருது(ALTA award)

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு

  • Weighing Light (2005)
  • Voices Bright Flags (2014)
  • Paolo Febbraro (2021)
  • After (Paul Dry Books, 2024)

மொழியாக்கம்

கவிதை
  • Disaffections (Cesare Pavese) (முழுத்தொகுப்பு 1930-1950) (Copper Canyon Press, 2002)
  • Gini Alhadeff (Patrizia Cavalli) (2012)
  • My Poems Won't Change the World: (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பு)
  • Last Dream (Giovanni Pascoli) (World Poetry Books, 2019)
  • Allegria (Giuseppe Ungaretti) (Archipelago Books, 2020)
  • Before Nightfall (Silvia Vecchini) (NYRB Kids, 2024)
உரை நடை
  • K. (Roberto Calasso) (2005)
  • The Mysterious Flame of Queen Loana Umberto Eco (2005)
  • The Zurau Aphorisms (Franz Kafka, Roberto Calasso) (2006)
  • Skylark Farm (2007) (Antonia Arslan)
  • Pinocchio (Carlo Collodi) (New York Review Books, 2008)
  • Pinocchio (Carlo Collodi) (The New York Review Children's Collection, 2012)
  • Six Memos for the Next Millennium (Italo Calvino) (2016)
  • The Rabbit Punch Translated by Geoffrey Brock (Marco Missiroli) (2024).
நகைச்சுவை
  • The Tenderness of Stones (Marion Fayolle) (New York Review Comics, 2019)
  • Social Fiction (Chantal Montellier) (New York Review Comics, 2023)

தொகுப்பாசிரியர்

  • Two Lines: Power (Marian Schwartz) (Two Lines Press, 2004)
  • The FSG Book of Twentieth-Century Italian Poetry (Farrar, Straus and Giroux) (2012)

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Mar-2026, 08:57:50 IST